Sunday, October 5, 2008

பாரதியார் கட்டுரைகள்

1970 களில் பூம்புகார் பதிபகத்தால் வெளியிடப்பட்ட பாரதியாரின் கட்டுரைகள் தொகுப்பு படிக்க கிடைத்தது.கவிதைகள் மூலமாகவே பாரதியை உணர்திருந்த எனக்கு அவரின் கருத்து தெளிவும்,சிந்தனை தெளிவும் கொண்ட கட்டுரைகள் வாசிக்க வாசிக்க சிறப்பாய் தோன்றியது.தாம் வாழ்காலத்தின் சூழ்நிலைகளையொட்டிசமயம்,சமூகம்,அரசியல்,கலைகள் குறித்து பாரதி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாய் வெளிவந்துள்ளது இந்நூல்.

தத்துவம்,உண்மை,மாதர்,கலைகள்,சமூகம் என பல்வேறு தலைப்புகளில் கீழ் தொகுக்கபட்டுள்ள கட்டுரைகளுள் மாதர் என்னும் தலைப்பின் கீழ் உள்ள பெண் விடுதலை குறித்த விழிப்புணர்வு கட்டுரைகள் இப்பதிவு எழுத காரணமாய் அமைந்தது.அதிலும் சீனத்து புரட்சி பெண்மணி "சியூ சீன்" குறித்து தன் மகளுக்கு பாரதியின் கடிதம் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று.



900களில் வாழ்ந்த சியூ சீன் திருமணம் ஆகி வீட்டில் பொழுதை கழித்த காலங்களில் அந்நிய படையெடுப்புகளில் பங்கு கொள்ள பெண்களுக்கு வழி இல்லாதது குறித்து " மனிதர்களாய் பிறந்து,தமது மனித சக்தியை காண்பிக்கும் பொருட்டாக கஷ்டங்களையும்,விபத்துக்களையும் எதிர்த்து உடைக்கும் பாக்கியம் இல்லாமல் போய்விட்டதே!வீட்டு காரியங்களின் அற்ப கவலைகளுக்கு இரையாகி மடியவா நாம் பூமியில் பிறந்தோம்??" என வருத்தம் கொண்டு குடும்பம் விட்டு பிரிந்து போர் கலைகளில் தேர்ந்து,நாடு தாண்டி இளைஞர்களை பயிற்றுவிக்கும் போர் பாசறை ஒன்றினை தொடங்கி வீர பெண்மணியாய் திகழ்ந்துள்ளார்.."ஏஷியாடிக் ரிவியூ" என்னும் இதழில் வெளிவந்த சியூ சீன் குறித்த கட்டுரையின் சாராம்சத்தை தன் மகள் தங்கம்மாவிற்கு கடிதமாய் எழுதியுள்ளார் பாரதி.

பாரதி என்றதும் என் நினைவிற்கு வருவது அவர் கவிதைகளோடு, தன் மனைவியோடு கம்பீரமாய் நிற்கும் எங்கள் வீட்டு பட்டகசாலையில்யுள்ள உள்ள புகைப்படம்.இனி சியூசீன் யின் வீர வரலாறும் சட்டென நினைவிற்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

நூல் வெளியீடு : பூம்புகார் பதிபகத்தார்
விலை : 10 ரூபாய்

6 comments:

குப்பன்.யாஹூ said...

பாரதியார் பற்றிய பதிவு மிக அருமை.

பத்து ரூபாயில் மிக பெரிய பொக்கிஷத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்.

சி யு சென் பற்றிய செய்திக்கும் நன்றி. தினமணியில் ஞாயிறு கிழைமைகளில் பாரதியார் எழுத்துக்கள் வெளி வருகின்றன. முடிந்தால் வாசியுங்கள்.

Krishnan said...

பாரதியாரின் கவிதைகளும் கட்டுரைகளும் விலை மதிப்பிடமுடியாத பொக்கிஷங்கள்.

லேகா said...

@ குப்பன்_யாஹூ

நன்றி. 1977 லில் வெளிவந்த பொழுது வாங்கிய நூல் இது.10 ரூபாய் என்பதில் ஆச்சர்யம் இல்லை :-) ..அது கொண்டுள்ள கட்டுரைகள் அரிதானவை..
நிச்சயமாய் படிக்க முயல்கிறேன்!!

லேகா said...

@Krishnan

//பாரதியாரின் கவிதைகளும் கட்டுரைகளும் விலை மதிப்பிடமுடியாத பொக்கிஷங்கள்.//

மறுக்க முடியாத உண்மை.

Jags said...

நல்ல பதிவு..
வாழ்த்துக்கள்...

வால்பையன் said...

நல்ல பதிவு