Monday, August 4, 2008

ஹிட்ச்காக்கின் "பேர்ட்ஸ்" -திகில் தரும் பறவைகளின் எதிர்பாரா தாக்குதல்

மற்றுமொரு ஹிட்ச்காக் திரைப்படம்...காட்சிகளில் திகில்,நடிகர்கள் தேர்வு,தேர்ந்த திரைகதை இவை மட்டும் அன்றி ஹிட்ச்காக் திரைபடங்களில் என்னை பெரிதும் வியப்பில் ஆழ்த்துவது ஒலிப்பதிவு மற்றும் கேமரா கோணங்கள் அதுவும் நவீன எந்திரங்கள் அறிமுகம் ஆகாத அந்த காலகட்டத்தில்..இவரின் சிறந்த திரைப்படங்கள் வரிசையில் இடம் பெரும் மற்றும் ஒரு திரைபடம் "பேர்ட்ஸ்"




THE BIRDS - Alfred Hitchcock இயக்கத்தில் 1963 இல் பறவைகளை மையமாய் கொண்டு வெளிவந்த த்ரில்லேர்.கதை நாயகி மேலனியா(Tippi Hedren) பறவைகள் விற்பனை நிலையத்தில் நாயகன் மிட்ச்யை(Rod Taylor) சந்திக்கிறாள்.தன் தங்கையின் பிறந்த நாளுக்கு லவ் பேர்ட்ஸ் வாங்க வந்த நாயகன் நாயகியை கடை பணிப்பெண் என தவறாக கருதி அவளிடம் அப்பறவைகள் வேண்டும் என கூறி செல்கிறான்.
நாயகனின் முகவரி தேடி அப்பரவைகளை கொண்டு புறபடுகிறாள்.அவனது வீடு அழகிய கிராமம் ஒன்றில் நகரத்தை விடு வெகு தொலைவில் உள்ளது.சிறு படகு மூலம் அவன் வீட்டை அடைந்து அப்பறவைகள் சிறு குறிப்போடு வைத்து விடு படகில் திரும்பும்பொழுது கழுகு கூட்டத்தினால் தாக்கபடுகின்றாள்..இதுவே பறவைகளால் ஏற்படும் முதல் விபத்து.

ரத்தகாயம் அடைந்த நாயகி மிலனியாவை மிட்ச் தன் வீட்டில் தங்கி செல்லும் படி வற்புறுத்தவே,அன்று அவன் வீட்டில் சிறிது நேரம் தங்குகிறாள்..மிட்சுடன் அவன் தாய் மற்றும் தங்கை உள்ளனர்.பின் தனக்கு தெரிந்த தோழியான பள்ளி ஆசிரியை ஆன்னியுடன் தங்குகிறாள்,கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு மிலனியாவும்,ஆன்னியும் கதவை திறக்க அங்கு ஒரு கழுகு இறந்து கிடக்கிறது. மறுநாள் மிட்சின் தங்கை பிறந்தநாள் விழாவில் சிறுவர்கள் தோட்டத்தில் விளையாடி கொண்டிருக்க,மிலனியா மிட்சுடன் பேசிக்கொண்டு இருக்கிறாள். அபொழுது கழுகுகள் கூட்டமாய் வந்து குழந்தைகளை தாக்குகின்றது.அது மட்டும் இன்றி மிட்சின் வீட்டினுள் புகுந்து அனைத்தையும் நாசம் செய்கின்றன..இக்காட்சி படமாகப்பட்டவிதம் அற்புதம்.



காவல்துறையில் புகார் செய்த பின் மிட்ச் தன் தாயாரை சமாதானம் செய்கிறான்,அவள் மிகவும் பயந்து மிலனியாவை தன்னுடன் இருக்கும் படி சொல்கிறாள்.மறுநாள் மிட்சின் தங்கையை பள்ளியில் இருந்து அழைத்து வர மிலனியா செல்கிறாள்.வகுப்புகள் முடியாததால் பள்ளியின் வாசலில் அமர்கிறாள்.எதோ தோன்ற திரும்பும் அவளுக்கு பெரும் அதிர்ச்சி.அங்கு கழுகுகள் மொத்த கூட்டமாய் அமர்த்து இருக்கின்றன.செய்வது அறியாமல் திகைந்து மிலனியா மெதுவாய் வகுப்பறைக்குள் சென்று குழந்தைகள் அனைவரையும்,தன் தோழி ஆன்னியையும் சத்தம் இன்றி வெளியேவர வலியுறுதுகிறாள். குழந்தைகளோடு மிலனியாவும்,ஆன்னியும் வெளிவர பறவைகள் அவர்களை துரத்துகின்றன.. படத்தில் மிகச்சிறந்த காட்சி இது.கிராபிக்ஸ் தலை எடுக்காத அக்காலத்திலேயே மிக சிறந்த முறையில் இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது.



பறவைகளின் கொடூர தாக்குதல் கிராமம் முழுவதும் பயத்தை உண்டு பண்ணுகிறது.அங்கு உள்ள ஹோட்டல் ஒன்றில் போது மக்கள் பேசுவதாய் அமைந்த காட்சி பொது மக்களின் மனதில் இருக்கும் பறவைகள் குறித்த பீதியை வெளிக்காட்டுவதாய் உள்ளது.பெரும் விபத்து நேரப்போவது அறியாமல் கிராமம் தன் நிலையில் இயங்கி கொண்டு இருக்க..பறவைகள் திடீர் தாக்குதலை தொடங்குகின்றன..அப்பொழுது அங்கு ஏற்படும் பெரும் தீ விபத்து,தொலைபேசி பூத்தினுள் மாட்டி கொண்ட நாயகி,பறவைகளோடு போரிடும் நாயகன் மிட்ச்..என ஒரே காட்சியில் அனைத்தையும் பெரும் பிரம்மாண்டத்தோடு hitcock இயக்கிய விதம் அருமை. பறவைகளின் தாக்குதலில் இருந்து தப்பித்து மிலனியா,மிட்ச்,அவனது தாய் மற்றும் தங்கை கிராமத்தை விடு வெளியேறுவதொடு படம் முடிகிறது.
இப்படத்தை நான் காண தொடங்கும் பொழுது Hitchcock இயக்கிய படம் என தெரியாது.படம் தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு அமானுஷ்யம் நிலவுகிறது.I could feel that it is a master piece. பறவைகள் ஏன் நகரத்தை தாக்குகின்றன என்கிற கேள்விக்கு விடை இல்லை..ஒரு மறைமுக குறியீடுடனே இக்கேள்வி படம் முழுதும் நம்மை தொடருகின்றது .படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய மற்றொன்று நாயகி மிலனியாய் நடித்துள்ள Tippi Hedren இன் நடிப்பு.இவர் ஹித்கோச்கின் ஆதர்ச நடிகை,நிறைவான அழகும் நடிப்பும் சேர பெற்ற நடிகை.த்ரில்லர் படங்கள் விரும்புவோருக்கு இத்திரைப்படம் ஒரு வித்யாச அனுபவமே....

24 comments:

Athisha said...

நல்ல பதிவு லேகா ,மேலும் தொடர வாழ்த்துக்கள்

லேகா said...

நன்றி அதிஷா :-)

Anonymous said...

நன்றாக எழுதியுள்ளீர்கள். மேலும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

Anonymous said...

Just a month before I watched this movie. Truly its master piece of Hitchcock's.Why the birds targetting the town is itching question in everyone's mind even after long time. That is the big hit of this movie.

KARTHIK said...

ஒரு செய்த்தாளில் பனிப்புகையில் வழி மறந்து சினமுற்று நகரத்தின் வீடுகளை தாக்கிய கடல் பறவைக் கூட்டம் பற்றி ஹிட்சக் படித்தார்.இச் சம்பவம் Daphne do Maurierன் பார்ட்ஸ் அவருக்கு நினைவூட்டியது.சில மார்ற்றங்களுடன் படமாக்கப்பட்ட அந்தக்கதைதான் The Birds.

இந்தக் கேசட் உங்களுக்கு எங்க கிடச்சுது.
ஹிட்சக் தொகுப்பு மட்டும் எங்கயும் எனக்கு கிடைக்கலைங்க.
நல்ல பதிவுங்க.

வளர்மதி said...

நல்லதொரு திரைப்படத்தைப் பற்றி எழுத முனைந்தமைக்கு நன்றிகள்.

எனினும் தங்களது விவரிப்பில் உள்ள சில தகவல் பிழைகளைச் சுட்டிக்காட்டுவதற்கு மன்னிக்கவும்.

முதலாவது, நாயகி கடையில் உள்ள விற்பனைப் பெண் அல்ல என்பது நாயகனுக்கு சில நிமிட உரையாடல்களிலேயே தெரிந்துவிடும். எனினும் இருவருக்கும் இடையில் ஒரு ஈர்ப்பு உண்டானதன் காரணமாகவே நாயகி நாயகனுக்குப் பிடித்தமான “காதற் பறவைகளை” வாங்கிக்கொண்டு அவனுக்குக் கொடுப்பதற்காக அவன் குடியிருக்கும் கடற்கரையோர சிறு நகரத்திற்குச் செல்வாள்.

இரண்டாவது, நாயகியை முதலில் தாக்குவது கழுகு அல்ல; கடற்பறவை (sea gull என்பார்கள்).

மூன்றாவது, பள்ளிக்கூட வாயிலில் நாயகி காத்திருக்கும்போது அருகில் கூடும் பறவைகளும் கழுகுகள் அல்ல; காக்கைகள்.

மற்றபடி நீங்கள் குறிப்பிட்டுள்ளது போன்று திரைப்படம் ஒரு அமானுஷ்யத் (மானுடத்திற்கு அகப்படாத பயங்கரம் என்ற நேரடியான பொருளிலேயே) தன்மை குறித்ததே.

அந்த அமானுஷயம் என்ன என்பது குறித்த உரையாடலே நீங்கள் குறிப்பிட்டுள்ள விடுதிக் காட்சியில்

//ஹோட்டல் ஒன்றில் போது மக்கள் பேசுவதாய் அமைந்த காட்சி பொது மக்களின் மனதில் இருக்கும் பறவைகள் குறித்த பீதியை வெளிக்காட்டுவதாய் உள்ளது.//

பல்வேறு நபர்களின் கருத்துக்களாக வெளிப்படும்.

வேறு வகையில் சொல்வதென்றால், மானுடர்கள் இயற்கையை உதாசீனமாக நடத்திக் கொண்டே போகும்போது, இயற்கையின் ஒரு - ஒரேயொரு உயிர், திரும்பத் தாக்குதல் தொடுத்தால் என்னவாகும் என்பது குறித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து யோசிக்க வைக்க முயற்சி செய்யும் படம் “பேர்ட்ஸ்”.

விடுதிக்குள் நாயகி சரண் புகும் முன்னர், டெலிஃபோன் பூத்திற்குள் பேச முற்படும்போது பறவைகள் தாக்கத்தொடங்கும். அப்போது திரை முழுக்க பூத் நிறைந்திருக்கும். ஒரு பிரம்மாண்டமான காட்சியை ஒரு சிறிய வெளியை (பூத்) வைத்து எப்படி உருவாக்கிக் காட்டுவது என்பது குறித்த ஒரு முயற்சி அந்தக் காட்சி.

இதற்கு எதிர்மறையான காட்சி போல், விபத்து நடந்து முடிந்த பின்னர், கேமரா மிக உயரத்தில் ஊரை மொத்தமாகக் காண்பிக்கும். ஏன் என்றும் யோசிக்கலாம் :)

மற்றது தொடர்ந்து எழுதுங்கள்.

வாழ்த்துக்களும் நன்றிகளும்.

அன்புடன்
வளர் ...

லேகா said...

உங்கள் பதிவிற்கு நன்றி வளர்மதி..
காட்டப்படும் பறவைகள் குறித்து எனக்கு குழப்பம் இருந்தது உண்மையே..கடல் பறவைகளா,காக்கைகளா,கழுகுகளா என என் குழப்பதை தவிர்க்க கழுகுகள் என பொதுவாய் குறிபிட்டேன்.உங்கள் தகவலுக்கு நன்று.

//வேறு வகையில் சொல்வதென்றால், மானுடர்கள் இயற்கையை உதாசீனமாக நடத்திக் கொண்டே போகும்போது, இயற்கையின் ஒரு - ஒரேயொரு உயிர், திரும்பத் தாக்குதல் தொடுத்தால் என்னவாகும் என்பது குறித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து யோசிக்க வைக்க முயற்சி செய்யும் படம் “பேர்ட்ஸ்”//
மிகச்சரியாக கூறினீர்கள்..படத்தில் என்னை கவர்ந்த காட்சிகளில் அதுவும் ஒன்று..

லேகா said...

கார்த்திக் அருமையான தகவல்,எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இன்றி ஹிட்ச்காக்கின் திரைப்படங்கள் இருப்பதில்லை.இதேபோல தொடர் கொலைகாரனின் கதையை "Frenzy" என்னும் திரைப்படம் மூலம் கூறிஉள்ளார்.அப்படம் குறித்து விரைவில் பதிவு செய்வேன்.

சில நாட்களுக்கு முன் ஹிட்ச்காக் திரைப்பட வாரம் என்று ஒரு வாரம் முழுவது இரவு அவரின் படங்களை சோனி பிக்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

தொடர்ந்து என்னை ஊக்க படுத்தும் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கார்த்திக்.

லேகா said...

Thanks for your comments Vendan

//Why the birds targetting the town is itching question in everyone's mind even after long time.//

I think tats Hitchcock's secret of success...there would be some unanswered quetsion tat make us to think abt the movie again and again

லேகா said...

நன்றி ஹிசுபாஷ் :-)

Anonymous said...

//இந்தக் கேசட் உங்களுக்கு எங்க கிடச்சுது.
ஹிட்சக் தொகுப்பு மட்டும் எங்கயும் எனக்கு கிடைக்கலைங்க.
நல்ல பதிவுங்க.//

தேவை எனில் இங்கிருந்து (rapidshare) டவுன்லோட் செய்து கொள்ளவும். படத்தின் (print)தரம் பற்றி எமக்கு தெரியாது.

http://rapidshare.com/files/35366253/The_Birds_G_G___SG.part1.rar
http://rapidshare.com/files/35370494/The_Birds_G_G___SG.part2.rar
http://rapidshare.com/files/35374925/The_Birds_G_G___SG.part3.rar
http://rapidshare.com/files/35379721/The_Birds_G_G___SG.part4.rar
http://rapidshare.com/files/35384576/The_Birds_G_G___SG.part5.rar
http://rapidshare.com/files/35389320/The_Birds_G_G___SG.part6.rar
http://rapidshare.com/files/35391765/The_Birds_G_G___SG.part7.rar

அல்லது

http://rapidshare.com/files/35758716/TB.part1.rar
http://rapidshare.com/files/35761918/TB.part2.rar
http://rapidshare.com/files/35765177/TB.part3.rar
http://rapidshare.com/files/35768448/TB.part4.rar
http://rapidshare.com/files/35772331/TB.part5.rar
http://rapidshare.com/files/35776594/TB.part6.rar
http://rapidshare.com/files/35779134/TB.part7.rar

KARTHIK said...

// படத்தின் (print)தரம் பற்றி எமக்கு தெரியாது.//

:-))

பகிர்ந்தமைக்கு மிக்கநன்றி நண்பரே.

லேகா said...

கார்த்திக் ஹிட்ச்காக் திரைப்படம் இனி தொலைகாட்சியில் வரும் என விளம்பரம் கண்டால் நிச்சயமாய் உங்களுக்கு தெரிவிக்கின்றேன்!!!

KARTHIK said...

// அவரின் படங்களை சோனி பிக்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.//

//என விளம்பரம் கண்டால் நிச்சயமாய் உங்களுக்கு தெரிவிக்கின்றேன்!!! //

இங்க ஈரோட்டுல அந்த சோனி சேனல்லாம் தெரியாதுங்க.
அதுல ஒளிபரப்பும் போது சொல்லிராதிங்க.
வேற star movies,HPO,World Movies இந்த மாதிரி சேனல் ரிலே பண்ணும் போது மட்டும் சொல்லுங்க.

நன்றி லேகா

லேகா said...

எங்க ஊர் மதுரையிலும் சோனி பிக்ஸ் தெரியாது கார்த்திக்,அந்த சானல் இருப்பதே இங்கு(சென்னை) வந்த பின் தான் தெரியும்...ம்ம்ம்ம்ம்...வேறு எங்கு ஒளிபரப்பினாலும் தெரிவிக்கின்றேன்.

KARTHIK said...

அனானி 1 தவிர மத்தது எல்லாம் PW கேக்குதுங்க.PW தரமுடியுமா
பிரிண்ட் நல்லாருக்குங்க

லேகா said...

அனானி வருவாரா??!! :-)
கார்த்திக் காத்திருங்க..

KARTHIK said...

அவரு வரலின நீங்க அப்லோட் பண்ணி
லிங்க் குடுங்க

லேகா said...

நான் அலுவலகத்தில் உள்ளேன் கார்த்திக்,இங்கு படங்கள் ஏற்றம் செய்ய இயலாது.என்னிடம் மடிக்கணினியும் இல்லை!!

KARTHIK said...

சென்னைல நாம கேசட் வாங்குற கடைல ஹிட்சக் மொத்த களைக்சனும் இந்ததடவ தரன்னு சொல்லிருக்காரு.விடுங்க கடைலயே வாங்கிரலாம் .

லேகா said...

வெகு நன்று!! :-)

Anonymous said...

தாமதத்திற்க்கு மன்னிக்கவும்.

Password : Go Getter

டவுன்லோட் பண்ணியதை அழித்துவிட வில்லையே?

லேகா said...

கார்த்திக்....அனானி வந்துவிட்டார்..கடவு சொல்லை குறித்து கொள்ளுங்கள்!!

KARTHIK said...

ஆஹா மிக்க நன்றி நண்பரே
அதை அழிக்கிலிங்க எப்படியும் வருவிங்கன்னு நம்பினேன்.
விந்துட்டிங்க.

நன்றி அனானி,
நன்றி லேகா