Monday, June 30, 2008

கோபல்ல கிராமம் - கீ.ராஜநாராயணன்




கி.ரா வின் கதைகளோடு எப்போதும் எனக்கு ஒரு தனிய பிரியம் உண்டு....என் தந்தை எனக்கு அறிமுகபடுத்திய முதல் தமிழ் இலக்கிய நாவல் கி.ரா வின் பிஞ்சுகள்..குழந்தைகளுக்கான அக்குறுநாவல் வழக்கில் இருந்து மறைந்த பல்வேறு தமிழ் சொற்கள்,நாம் அறிந்திரா பறவை இனங்கள்,கிராமத்து சிறுவன் கொண்டிருக்கும் கற்பனைகள்,பறவைகள் குறித்து யாவும் அறிந்த வேதி நாயக்கர் .........என தன்னுள்ளே கொண்டிருக்கும் சேதிகள் எண்ணில் அடங்கா....நிச்சயம் அந்நாவல் குறித்து இவ்வலைத்தளத்தில் பதிவு செய்வேன்..

கி.ராவின் கோபல்ல கிராமம் நாவலை நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் படித்தேன்..கரிசல் இலக்கியம் பகட்டில்லா,எளிய சொற்கள் கொண்டு,வட்டார மொழி வழக்கில்,கிராமிய மனம் கொண்டு அம்மக்களின் வாழ்வியல் கதை சொல்லும் இலக்கியம்..கரிசல் இலக்கிய முன்னோடி எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் கி.ரா.அவரது "கோபல்ல கிராமம்","கோபல்ல கிராமத்து மக்கள்" ஆகிய இரு நூல்களும் பெரும் வரவேற்பை பெற்றவை..இதில் "கோபல்ல கிராமத்து மக்கள்" நாவல் சாகித்திய அகாடமி விருது பெற்றது.

கோபல்ல கிராமம் உருவான கதை,அவ்வூரின் மக்கள்,அவர்கள் தொழில்கள்,பழக்க வழக்கங்கள்,ஊரில் மதிப்பு கொண்ட கோட்டையார் குடும்பம் என கதை முழுதும் கோபல்ல கிராமத்து மக்களோடு ஒருங்கே செல்கிறது..கதை நிகழ்வது சுந்தந்திரம் பெறுவதற்கு வெகு முன்னே..கோபல்ல கிராமம் உருவான கதை,அவ்வூரின் மக்கள்,அவர்கள் தொழில்கள்,பழக்க வழக்கங்கள்,ஊரில் மதிப்பு கொண்ட கோட்டையார் குடும்பம் என கதை முழுதும் கோபல்ல கிராமத்து மக்களோடு ஒருங்கே செல்கிறது.. கோபல்ல கிராமத்தின் ஒரு அழகிய காலை விடியலை அறிமுகபடுத்துவதோடு தொடங்கும் கதை..பின் கோட்டையார் வீட்டின் சகோதரர்களை அறிமுகம் செய்து..வழிபறி கொள்ளையனால் கொலை செய்யப்படும் கர்ப்பிணி பெண்ணின் வழக்கினை கோபல்ல கிராம மக்கள் எதிர் கொள்ளும் சம்பவத்தோடு ஆரம்பித்து இடை இடையே அக்கிரமத்தின் நீண்ட நெடிய வரலாறோடு சொல்லபடுகின்றது..

கோட்டையார் வீட்டு மூத்த கிழவி மங்கையதாயாருஅம்மாள் வழியாக சொல்லப்படும் கதைகள்,கிளை கதைகள் யாவும் சற்று மிகையாக தோன்றினாலும் கற்பனை செய்து ரசிக்க கூடியவை..துலுக்க ராஜாகளுக்கு பயந்து நாயக்கர் இன மக்கள் ஆந்திராவில் இருந்து புலம் பெயர்ந்து தமிழகத்தில் ஓர் இடத்தில் குடியேறும் நிகழ்வை கி.ரா விவரித்துள்ளது கோபல்ல கிராமத்திற்கு மட்டும் அல்ல எல்லா சமூகத்திற்கும் பொருந்தும்..ஒற்றுமையாய் மக்கள் காடுகளை அழித்து விளைநிலம் ஆக்கி,பசு,கன்றுகள் வைத்து விவசாயம் புரிந்து தமக்கான சாம்ராஜியத்தை உருவாக்கி தமக்கு பின் வரும் சந்ததியினருக்கு வாழ வழி செய்வது எளிய காரியம் அல்ல..முன்னோர்கள் மீது பெரும் மதிப்பை வரச்செய்யும் பகுதியாய் அக்காட்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன..

பெண்களை வர்ணிக்கும் இடங்கள் மிகையான கற்பனையாக தோன்றினாலும் அவை நடந்து இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது..நீண்ட தலை முடி கொண்ட பெண்ணை வர்ணிக்கும் பொழுதும்,சமையலில் சிறந்த ஒருத்தியின் கை பக்குவத்தை விளக்குவதிலும்,பெரும் அழகியான சென்னா தேவியை கடவுளின் அருள் கொண்ட அழகு பெற்றவள் என்றும் கொள்ளையர்களும் அவள் அழகாள் மனம் திருந்தியதாகவும் மங்கையதாயாரு அம்மாள் கூறுவது மெல்லிய புன்னகையோடு ஏற்று கொள்ள வேண்டியது...

கோபல்ல கிராமத்தில் வசிக்கும் பலருள் நம்மை மிகவும் கவர்வது அக்கையா,கோட்டையார் வீட்டில் பணிசெய்யும் இவரது கதாபாத்திரம் ஹாசியம் மிகுந்தது..மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டு யாவரையும் இவர் செய்யும் பகடி கிராமத்து மனிதர்களுக்கே உள்ள குணம்.ஓர் நீண்ட அத்தியாயத்தில் அக்கிரமத்தின் மருத்துவர்,ஜோசியர்,கயறு திரிப்பவர்,தீவனம் விற்கும் வியாபாரி,இடையன்,கோவில் பூசாரி என எல்லா நாயக்கரையும் சிறு குறிப்போடு கி.ரா அறிமுகம் செய்துஇருப்பது அருமை.அம்மக்களுக்குள் நிலவும் ஒற்றுமையை பல காட்சிகள் விளக்கினாலும் கோபல்ல கிராமமே சேர்ந்து தீவட்டி கொள்ளையர்களை ஊரை விட்டு விரட்டும் காட்சி ஓர் சிறந்த சான்று.

பொழுது சாய்ந்தால் உப்பை "ருசிகள்" என அழைப்பது,திருமணமானவர்கள் மட்டுமே வெற்றிலை போட அனுமதிக்கப்படுவது ,கர்ப்பிணி பெண்கள் இறந்தால் அவர்கள் நினைவாக கிராம எல்லையில் சுமைதாங்கி கல் அமைப்பது..என இன்றும் கிராமங்களில் வழக்கில் இருக்கும் பழக்க வழக்கங்கள் நாவல் முழுதும் விரவி வருகின்றது.ஆங்கிலேய ஆளுமை இந்தியாவில் பரவ தொடங்கும் பொழுது கோபல்ல கிராமம் கண்ட சிறு சிறு எதிர் வினைகளோடு கதை முடிகிறது."கோபல்ல கிராம மக்கள்" நாவலில் கி.ரா ஆங்கில ஆட்சியில் இருந்து விடு பட்டு நாடு சுதந்திரம் அடைந்ததை கோபல்ல கிராம மக்களின் ஆச்சர்யங்களோடு விளக்குகின்றார்.

பொழுது சாய்ந்தால் உப்பை "ருசிகள்" என அழைப்பது,திருமணமானவர்கள் மட்டுமே வெற்றிலை போட அனுமதிக்கப்படுவது ,கர்ப்பிணி பெண்கள் இறந்தால் அவர்கள் நினைவாக கிராம எல்லையில் சுமைதாங்கி கல் அமைப்பது..என இன்றும் கிராமங்களில் வழக்கில் இருக்கும் பழக்க வழக்கங்கள் நாவல் முழுதும் விரவி வருகின்றது.ஆங்கிலேய ஆளுமை இந்தியாவில் பரவ தொடங்கும் பொழுது கோபல்ல கிராமம் கண்ட சிறு சிறு எதிர் வினைகளோடு கதை முடிகிறது.இதன் தொடர்ச்சியான "கோபல்ல கிராம மக்கள்" நாவலில் கி.ரா ஆங்கில ஆட்சியில் இருந்து விடு பட்டு நாடு சுதந்திரம் அடைந்ததை கோபல்ல கிராம மக்களின் ஆச்சர்யங்களோடு விளக்குகின்றார்.ஓர் எளிய அழகிய கரிசல் கிராமத்தின் வரலாறை படித்த மிகுந்த திருப்தியை தரவல்லது இந்நாவல்.

6 comments:

rapp said...

எனக்கு கி.ரா வின் கதைகளோடு அதிகப் பரிச்சயமிருந்ததில்லை லேகா. உங்கள் வாயிலாக சிறிது அறிந்துக் கொண்டேன். நன்றி. உங்கள் எழுத்து தொடர என் வாழ்த்துக்கள்.

அகரம் அமுதா said...

தங்களுடைய இக்கட்டுரையைப் படித்த பிறகு கீ.ராவைப் படிக்கவேண்டும் போலுள்ளது. நல்ல எழுத்து நடை. வாழ்த்துக்கள்!

லேகா said...

நன்றி rapp,
கீ.ராவின் படைப்புகள் யாவும் எளிய நடையில்,கரிசல் வழக்கில் உள்ளதை விளக்கும் அற்புத காவியங்கள்..ஒரு முறை படித்தால் திரும்ப திரும்ப படிக்க தூண்டும் நடை..

லேகா said...

நன்றி அமுதா,
கி.ரா வின் புத்தகங்கள் பட்டியலை இவ்வலைத்தளத்தில் "எழுத்தாளர்கள் ஒரு எளிய அறிமுகம்" பிரிவில் குறிபிட்டுள்ளேன்..யாவும் siranthathe..

இனியாள் said...

Lekha,

Nalla irukku vimarsanam. Enakku romba paraparappa irukkunga, nan ennoda paLLi mudinthu college serum kaalam(sema Vetti) antha kaalangalla padichcha novelgal niraiya athula romba rasichathu gopalla gramam. Ki. Ra voda aazhumai chance a illanga. Unga vimarsanam marupadiyum padikkum aavala erpaduththuthu. Intha varusham nadanththa puththaga kankatchi la Pinjugal vaanginen, romba natkal kalichchu fresh feel,

"Yaarum pugamudiyatha araiyil
yaarumatra thanimai irulil
thalaiyanaiku mel
ullangaikul
pathinthu kidakkum kaathukkul
vee vee ena keatkum antha
oosaiku thookkam kalaikum
aththanai mozhiyum therinthu irukirathu"

thenmozhiyoda intha kavithai nyabagam vanthathu. kathai fullave thalir mathri azhagana vannangalodu irunthathu.

Natpirku iniyal.

லேகா said...

நன்றி இனியாள்,

கி.ரா வின் கரிசல் இலக்கியம் படிப்பதற்கு மட்டும் அல்லாது கற்பனை செய்து மகிழ்வதிலும் எளிமை கொண்டதே..அவர் கூறும் கதைக்களம் நம் முன்னோர்கள் வாழ்ந்து மறைந்த மண்ணின் கதையே..

//nan ennoda paLLi mudinthu college serum kaalam(sema Vetti) antha kaalangalla padichcha novelgal niraiya athula romba rasichathu gopalla gramam//

நீங்கள் குறிபிட்டுள்ள அதே கால கட்டத்தில் தான் நானும் என் இலக்கிய வாசிப்பை தீவிரமாய் தொடங்கினேன்..கல்லூரி தொடங்கியதும் வாசிப்பில் சிறிது தோய்வு..பணியில் சேர்ந்ததும் மிகப்பெரும் ஆவலுடன் மீண்டும் இலக்கியம் படித்து வருகிறேன்..உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி..