Thursday, June 19, 2008

கணையாழியின் கடைசிப்பக்கங்கள்(1968-1998) - சுஜாதா



கணையாழி இலக்கிய இதழில் சுஜாதா ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்கிற புனைப்பெயரில் 1968 முதல் 1998 வரை எழுதிய பகுதி மற்றும் பெட்டி என்கிற தலைப்பின் கீழ் எழுதியவை யாவும் தொகுக்கப்பட்டு உயிர்மெய் பதிபகத்தால் வெளிவந்துள்ளது.தொகுத்தவர் தேசிகன்...ஒரு கமர்ஷியல் எழுத்தாளராக/விஞ்ஞானியாக/வசனகர்த்தாவாக மட்டுமே அறிய பட்ட சுஜாதா இந்நூலின் மூலமாக சிறந்த விமர்சகராக நமக்கு வெளிபடுகிறார்.A pefect critic.இந்நூலின் தொகுப்புக்களை சினிமா,தமிழ் இலக்கியம்-கவிதை,அறிவியல் என மூன்று வகையாய் சுலபமாய் பிரிக்கலாம்..

சினிமா:

சுஜாதா 1960களில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களை அவருக்கே உரிய பாணியில் பகடி செய்திருப்பது அருமை...சிவாஜி,எம்.ஜி.ஆர் படங்களையும்,பீம்சிங்க்தின் பா வரிசை படங்களையும்,எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையையும் சமகாலத்தில் விமர்சித்து இருப்பது தற்போது சாத்தியமா என்றால் நிச்சியமாய் இல்லை.சிறந்த திரைப்படங்களை அழகாய் பதம் பிரித்து சுஜாதா செய்துள்ள விமர்சனங்கள் காலத்தை கடந்து நிற்கும் அத்த்திரைப்படன்களே அத்தாட்சி..குறிப்பிட்டு சொல்லவேண்டியவை -ரேயின் பதேர் பாஞ்சாலி,மீரா நாயரின் சலாம் பாம்பே ,கிரீஸ் காசர்கோட்டின் கடஸ்ரேதா,ஷ்யாம் பெனகலின் திரைப்படங்கள்..


கமலஹாசனுடன் தாம் கொண்டிருந்த நட்பினை மெய்பிக்கும் வண்ணம் தொடர்ந்து கமலோடு தான் செலவழித்த கனங்களை நினைவு கூறுகிறார்.. 1980 களில் வெளிவந்த திரை இசைப்பாடல்கள் பெரும்பாலும் கொண்டிருக்கும் பாடல் வரிகளின் ஒத்த வார்த்தைகள் என சுஜாதா கூறும் பட்டியல் சிரிக்க வைக்கும் உண்மை .. அன்றைய காலகட்ட இளைஞர்களை அக்னிநட்சத்திர வாலிபர்கள் என கோடிட்டு காட்டி இருப்பது சினிமா மோகம் கொண்டும் திரியும் இளைஞர்களுக்கு என்றும் பொருந்தும்..1990 இல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற அஞ்சலி திரைப்படத்தின் ஒளிப்பதிவு மிக்க இருள் சார்ந்து எடுக்க பட்டதை கண்டித்து இருக்கும் சுஜாதா அரண்மனை கிளி திரைபடத்தை அறை பக்கத்திற்கு விமர்சனம் செய்திருப்பது வேதனை.

இலக்கியம் - தமிழ் - கவிதை :

சங்க இலக்கியம் மீது சுஜாதா கொண்டிருந்த ஆர்வம்,தேடல்,ஆராய்ச்சி நான் சற்றும் எதிர்பாராதது.சமீபத்திய சுஜாதா இரங்கல் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருந்தது "அவர் கொண்டிருந்த தீவிரம் அவர் எழுத்தில் இல்லை " நினைவில் வந்தது..குறுந்தொகை,சிலப்பதிகாரம்,ஆழ்வார் பாடல்கள்,கம்பராமாயணம்,ஆண்டாள் பாசுரம் என சங்க இலக்கியத்தோடு அழகிய தேடலில் ஈடுபட்டதோடு சிறந்த சங்க இலக்கிய விளக்க உரை நூல்களை பகிர்ந்துள்ளார்..சங்க இலக்கியத்தை அடுத்து கவிதை மீது அவர் கொண்டிருந்த காதல் அலாதி..அதிலும் முக்கியமாய் ஹைக்கூ கவிதைகளை அறிமுகம் செய்து அதை எழுதுவதற்கான விதிகளை விளக்கி தான் ரசித்த,படித்த சிறந்த கவிதைகளை கூறி இருப்பது கவிதையில் ஆர்வம் இல்லாதவர்களையும் ஈர்க்கும் சுஜாதாவின் வார்த்தை வசியம்.

தமிழ் எழுத்தாளர்களில் சுஜாதாவிற்கு மிக விருப்பமாய் இருந்தவர்கள் வண்ணதாசன்,சுந்தர ராமசாமி,அசோகமித்திரன்,ஜானகிராமன்,கி.ராஜநாராயணன் என பட்டியல் நீக்கிறது..சுந்தர ராமசாமியின் "ஒரு புளியமரத்தின் கதை" யையும்,கி.ரா வின் "கோபல்ல கிராமத்தையும்" விரிவாய் விமர்சித்துள்ளார்..தனது நாவல்கள்,கதைகள் குறித்த வாசகர்களின் எதிர்வினைகளை எந்த ஒரு ஒளிவு மறைவும் இன்றி குறிப்பிட்டுள்ளார்.இலக்கிய கூட்டம் ஒன்றில் "நீ என்ன எழுதி சாதிச்சனு இங்க வந்து இருக்க" என ஒருவர் கேட்டதை எழுதி தனக்கே உரிய பகடி யோடு பதில் அளித்ததை கூறிஉள்ளார்.உலக தமிழ் மாநாட்டில் சுஜாதாவின் உரை நிறைவேற்றப்படவேண்டிய அறிய பல நிதர்சன கருத்துக்கள் கொண்டது..தமிழை ஆக்சிஜென் குடுத்து காப்பற்றும் நிலை வராது இருக்க அவர் கூறும் வழிமுறைகள் பரிசீலிக்கபடவேண்டியவை.

அறிவியல்:

இந்நூலை படிக்க தொடங்கும் முன் எனக்கு தோன்றியது சுஜாதாவின் அறிய பல அறிவியல் கருத்துக்கள் நிறைந்து இருக்கும் என்பதே..சற்றும் எதிர்பாராமல் சங்க இலக்கியம் குறித்தும்,கவிதை எழுதும் விதிகளை விளக்கியும் தனது மற்றுமொரு முகத்தை வெளிகாட்டி அதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டார்.மிக சிறிய அளவிலான அறிவியல் கட்டுரைகளே இதில் உள்ளது.மின் ஒட்டு பதிவு இயந்திரம் கொண்டுவந்ததில் தனக்குள்ள பங்கினை எளிமையாய் விளக்கி உள்ளார்.ஓசோன் மண்டலம் சிதைந்து வருவதை தடுக்க "Green House effect" - குறித்த எளிய விளக்கம் ஒன்றினை பாமரனும் புரிந்து கொள்ளும் வண்ணம் அளித்து இருப்பது நன்று.தமிழில் கணினியில் தட்டச்சு செய்யும் முறை குறித்தும்,அது நடைமுறை படுத்த அணுகவேண்டிய சாப்ட்வேர் நிறுவனகள் குறித்த கட்டுரை பயன்தரக்கூடியது.மாணவர்களோடு நடந்த நேரடி உரையாடல் ஒன்றில் 2000 தில் நடக்க சாத்தியமானவை என சுஜாதா பட்டியலிட்டுள்ளது யாவும் தற்போது நடைமுறையில் உள்ளது..

இப்புத்தகத்தை முழுதும் படித்து முடித்ததும் நிறைந்த திருப்திக்கு மாறாக விடை தெரியா கேள்விகள் சில மனதில் வந்து மறைந்தது,அவை...


- சங்க இலக்கியம் முதல் தற்கால ஹைக்கூ முதல் வியந்து விவரித்து எழுதி உள்ள சுஜாதா சிறந்த கவிதைகளை தராது ஏனோ??தி.ஜா,சு.ரா,கி.ரா என தமிழ் இலக்கிய வாசிப்பை விஸ்தாரமாய் அலசி விமர்சித்தவர் அவர்கள் போல இன்றும் பேச கூடிய ஒரு நல்ல நாவலை தராதது வருத்தமே..

- ரே,மீரா நாயர்,ஷ்யம்பெனகள் என சிறந்த இயக்குனர்களின் திரைப்படங்களை சிறப்பாய் மதிப்பிட்டு விமர்சனம் செய்து அன்றைய கால தமிழ் திரை உலகம் உருபடாது என கடுமையாய் சாடி எழுதி விட்டு..பின்னாளில் தானும் அந்நியன்,சிவாஜி என கமர்ஷியல் குப்பையில் விழுந்தது unacceptable compromise!!

- அனேகமாக உலகின் சிறந்த புத்தகங்கள் யாவும் சுஜாதா படித்து இருப்பார்..அறிவியலில் சிறந்தவர்..இருந்தும் தன் ஜாதியின் மீது கொண்ட ஒரு வித பெருமை அவர் எழுத்துக்களில் ஆங்காங்கே தெரிவதை மறுப்பதற்கில்லை..

எது எப்படியோ..மறுக்க முடியாத உண்மை..He is an inborn Genius!!

16 comments:

Athisha said...

நல்ல பதிவு..

பதிவிற்கு நன்றி

லேகா said...

Thanks a lot Athisha...

Unknown said...

you have all your questions for the your answers... :)

Unknown said...

you have all your questions for the your answers... :)

Sanjai Gandhi said...

//சங்க இலக்கியம் முதல் தற்கால ஹைக்கூ முதல் வியந்து விவரித்து எழுதி உள்ள சுஜாதா சிறந்த கவிதைகளை தராது ஏனோ??தி.ஜா,சு.ரா,கி.ரா என தமிழ் இலக்கிய வாசிப்பை விஸ்தாரமாய் அலசி விமர்சித்தவர் அவர்கள் போல இன்றும் பேச கூடிய ஒரு நல்ல நாவலை தராதது வருத்தமே..//

ஒரு சிறந்த மாணவனால் சிறந்த ஆசிரியராக இருக்க முடியாது என்று சொல்வார்கள்.:)

நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

அகரம் அமுதா said...

பல நல்ல தகவல்களைப் பகிர்ந்துள்ளமை நன்று. வாழ்த்துக்கள்.

லேகா said...

Thanks for your comments Rajasekar,
yeah i got answers for all my questions.."Compromise"

லேகா said...

நன்றி சஞ்சய்..ஆனால் சுஜாதாவை என்னால் மாணவனாக பார்க்க இயலவில்லை..அவர் ஆசிரியர்களுக்கு எல்லாம் ஆசிரியர்.. ஆதான் எனக்கு எழுந்த கேள்விகளை குறிபிட்டுள்ளேன்..

லேகா said...

நன்றி அமுதா,உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி..

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

சுஜாதா குறித்து எனது வலைப்பதிவில் புது பகுதி தொடங்கியுள்ளேன்

லேகா said...

நன்று சந்திரமௌளீஸ்வரன் ,சுஜாதா, ஜெயகாந்தன் குறித்த உங்களின் குறிப்பு அருமை ..மதுரை சர்வோதய இலக்கிய பண்ணையோடு எனக்கும் நீங்கா தொடர்புண்டு..என் ஆரம்ப கால இலக்கிய வாசிபிற்கான தேடல் அங்கே தொடங்கியது..எனது சொந்த ஊரும் மதுரையே.....1960 - 1980 வரையிலான ஜெ.கே வின் சிறுகதை மற்றும் நாவல்கள் படிக்க வேண்டியவை.நான் ரசித்து படித்த ஜெ.கேவின் நாவல்கள்..
சில நேரங்களில் சில மனிதர்கள்
அக்னி ப்ரேவேசம்
என்னைபோலே ஒருவன்
ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்
ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன
குருபீடம்
மாலை மயக்கம்
கங்கை எங்கே போகிறாள்......................................
இலக்கியம் குறித்த உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்

இனியாள் said...

Lekha,

Arumaiyana vimarsanamnga. Kanaiyazhiyin kadaisi pakkangal naanum padiththu irukiren, athai padiththu sujatha kavithai ezhutha solli koduththai vaiththu nan achchu pichchu endru ezhuthiya kavithaigal ellavatraiyum nalla irukku endru veru vazhi indri solla vaiththu en appa amma prananai vaangiya natkal ninaivukku varugirathu. Avar oru arivu jeevinga, avar vimarsahar. Avar bhaashaila sonna avar oru iniya iyanthira.......illaya.

Natpirku iniyal.

லேகா said...

நன்றி இனியாள்...

சுஜாதாவிற்கு கவிதை மீதுள்ள ஆர்வம் விகடனில் அவர் எழுதி வந்த கற்றதும் பெற்றதும் பகுதியில் ஆங்காங்கே வெளிப்படும்..ஆயினும் இந்நூல் படித்த பின் அவருக்கு கவிதை மீது இருந்த ஆர்வமும்,ஞானமும் வியக்க வைத்து..நிச்சயமாக அவர் ஒரு அறிவு ஜீவி எழுத்தாளர்..அதில் மறுப்பேதும் இல்லை..

Rajan said...

Hi Really a Nice Work... Keep going..

naren said...

உங்கள் கேள்விகள் நியாயமானது ...
எனக்கு அவர் விகடனில் எழுதியது ஞாபகம் வருகிறது ,அதில் "நான் ஷங்கரிடம் உலக சினிமா ,நவீன சினிமா ,என எவ்வளவு பேசினாலும் -"சார் !நீங்க சொல்றது இது தானா என்று சொல்லிவிட்டு குண்டூசி அளவு தான் எடுத்துக்கொள்வார் !"
மேலும் என்னிடம் ஒருமுறை ப்சும்போது சொன்னார் "சார்! என்னோட ஆடியன்ஸ் நீங்க மட்டும் இல்ல "-என்று இ
நிலைமை இவ்வாறு இருக்க தமிழ் சினிமாவின் பாழடைந்த பகுதிகளை பழுது பார்க்க ஒரு சுஜாதா போதாது!..
மற்றபடி அவர் கவிதை படைகாதது ஆட்சர்யமே !
அது சரி நீங்கள் ...பட்டம்பூட்சி என்ற சுய சரிதையை படித்து இருக்கீங்களா ?(வானதி பதிப்பகம்) ..நீங்கள் அதை பற்றி எழுதினால் பொருத்தமாக இருக்கும் !

vguruviknesh said...

he is the most intellectual person in tamil literary circle.he worked as a literary person in commercial magazine....the great sujatha...!!!