Thursday, June 12, 2008
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
விருத்தாசலம் என்னும் இயற் பெயர் கொண்ட புதுமைபித்தன் (1906-1948) தமிழ் இலக்கிய உலகில் ஒரு தவிர்க்க முடியாத முன்னோடி எழுத்தாளர்.பத்திரிக்கை நிருபராய் பணியாற்றிய இவர் 200கும் மேற்பட்ட சிறுகதைகள்/கவிதைகள் எழுதி உள்ளார்,மேலும் கிழகத்திய நூல்கள் சிலவற்றை மொழி பெயர்த்துள்ளார். தினமணி,மணிக்கொடி,தினகரி ஆகியவை இவர் பணிபுரிந்த பத்திரிக்கைகள்.புதுமைபித்தன் கதைகள் பெரும்பாலும் அடிமட்ட மக்களின் வேதனைகளை நகைச்சுவையோடு விளக்குவதாகவே இருக்கும்..புதுமை பித்தனின் கதைகளின் சிறப்பு அவை எல்லா காலகட்டத்திற்கும் பொருந்தி வருவது.தமிழில் முதல் அறிவியல் சிறுகதை(கடவுளும் கந்தசாமி பிள்ளையும்) இவருடையதே..நான் படித்து ரசித்த புதுமைபித்தனின் சிறுகதைகள் சில இங்கே..
ஒரு நாள் கழிந்தது:
ஒரு ஏழை எழுத்தாளனின் ஒரு நாள் பொழுதினை வர்ணிக்கும் இக்கதை மிகுந்த வலியுடன் செல்லும் வாழ்வின் ஒரு பொழுது நகைச்சுவை சேர்ந்து கூறப்பட்டுள்ளது.முருகதாசர் தினமும் மளிகை கடையில் கடன் சொல்லி பொருட்கள் பெற்று தின பொழுதை களிக்கும் சராசரி பிரஜை.விளையாட சென்ற அவரது குழந்தை அலமு ரிக்க்ஷா வண்டியில் செல்ல ஆசை பட அதற்கு பணம் இன்றி அவளை அழைத்து வர பின் மளிகை கடைக்காரரிடம் திங்கள் வரை கடன் சொல்லி சிரித்து மழுப்பி வீடு வந்து நண்பர்களிடம் பணம் பெற்று அன்றைய பொழுது கழிந்த முருகதாசரின் மகிழ்வோடு கதை நிறைவடைகிறது..
முருகதாசரின் ஏழ்மையை விவரிக்கும் ஒவ்வொரு இடத்திலும் புதுமை பித்தன் காட்டி இருக்கும் உவமைகள் நகைச்சுவையோடு தீவிர தன்மை கொண்டவை. முருகதாசரின் வீட்டு அமைப்பை விவரிக்கும் முன் புதுமை பித்தன் கூறுவது "சென்னையில் 'ஒட்டுக் குடித்தனம்' என்பது ஒரு ரசமான விஷயம். வீட்டுச் சொந்தக்காரன், குடியிருக்க வருகிறவர்கள் எல்லாரும் 'திருக்கழுக்குன்றத்துக் கழுகு' என்று நினைத்துக் கொள்ளுவானோ என்னமோ! "- இக்கதை எழுதபெற்றது 1937, இன்றைய நிலையும் இதுவே...முருகதாசரின் நண்பர் சுப்ரமணிய பிள்ளையை அலமு பல்லு மாமா என்ன கூறுவதை வரும் பகுதி வாய் விட்டு சிரிக்க செய்யும் ஹாசியம்.புதுமை பித்தன் கதைகளில் முகியம்மாக இடம்பெறுபவை இரண்டு,ஏழ்மை மற்றும் நகைச்சுவை..இரண்டிற்கும் நிஜ வாழ்வில் ஏழாம் பொருத்தம் இருப்பினும் அவரது கதையாடலின் சிறப்பு இரண்டையும் இணைப்பது.
பொன்னகரம் :
உயர்ந்த கட்டடங்கள் பெருகிய அதே விகிதத்தில் இன்று சேரிகளும் பெருகி விட்டன..புதுமை பித்தனின் இக்கதை சேரி பகுதி மக்களின் வாழ்வை படம் பிடித்து காட்டுகிறது.மனிதனின் அடிப்படை தேவைகள் உணவு,ஆடை,உறைவிடம்..இவை மூன்றும் சேரி மக்களுக்கு இருந்தும் இல்லாதது போலதான்..
ரயில் தண்டவாளம் ஓரமாய் அமைந்து இருக்கும் பொன்னகரம் என்னும் சேரியை விவரிக்கும் புதுமைபித்தன்
- "தண்ணீர்க் குழாய்கள்? இருக்கின்றன. மின்சார விளக்கு? ஞாபகமில்லை"
- "பொன்னகரத்துக் குழந்தைகளுக்கு 'மீன் பிடித்து' விளையாடுவதில் வெகு பிரியம். அந்த முனிசிபல் தீர்த்தத்தில்"
- "ரயில்வே தண்டவாளத்தின் நின்று "குட்மார்னிங் சார்!" என்று கத்துவதில் ரொம்ப ஆனந்தம் அவர்களுக்கு. அதுதான் அவர்களுக்குக் கிடைக்கும் ஆரம்ப ஆங்கிலக் கல்வி"
என வெகு சில வரிகளில் ஏழை குழந்தைகளின் விதியை விளக்குகிறார்.
அம்மாளு பொன்னகரத்து குடிசைவாசி,கூலி தொழிலாளி,ஜட்கா வண்டிகாரனின் மனைவி... குடித்து விடு வண்டியோட்டி பலந்த காயம் கண்ட கணவனை மருத்துவம் செய்ய பணம் இல்லாததால் தன்னை விற்று வைத்தியம் பார்க்கிறாள்..
இக்கதையின் கடைசி வரி("என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்னகரம்!") ஒரு எழுத்தாளனால் 1930களில் சொல்ல பட்டு இருப்பது..ஆச்சர்யம் கூடிய உண்மை..
கடவுளும் கந்தசாமி பிள்ளையும் :
புதுமைபித்தனின் மிகச்சிறந்த கதைகளுள் ஒன்று..எல்லை அற்ற கற்பனை கொண்டு இவர் எழுதிய இக்கதை தமிழில் முதல் அறிவியல் தொலைநோக்கு சிறுகதை.பூமிக்கு வரும் கடவுள்(சிவன்) வைத்தியர் கந்தசாமி பிள்ளையை கண்டு அவரோடு நகர வாழ்வை அனுபவித்து பிழைக்க வழி இன்றி திரும்பி செல்வதே கதை.50 வருடங்களுக்கு முந்தைய இக்கதை இன்றைக்கும் பொருந்தி வருகின்றது..ஏழை தகப்பன் ஆனா கந்த சாமியிடம் அவரது மகள் அப்பா வாங்கி வந்து இருக்க என கேட்க என்னையே வாங்கி வந்து இருக்கேன் என அவர் பதில் கூறுவது ஏழ்மையின் மறைமுக வெளிப்பாடு.நடனம் ஆடி பிழைக்க கடவுளையும்,தேவியையும் கந்த சாமி சபா நடத்தும் திவானிடம் கொண்டு செல்ல அங்கு அவர்கள் நடனம் விரும்ப படாமல் விரட்டி அடிக்கபடுவதாக உள்ளது..ஆகா சிவன் கூத்து போன்ற நடனங்கள் அப்போது இருந்தே அழிவை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளன..கடவுளோடு கந்தசாம்யின் உரையாடல்கள் இன்னும் விரிவாய் அமைந்து இருக்கலாம்..இருப்பினும் புதுமைபித்தனின் இம்முயற்சி பெரும் ஆச்சர்யம் தருவதே..
செல்லம்மாள்
புதுமைப்பித்தனின் கதைகளிலே மிகுந்த சோகம் நிறைந்த இச்சிறுகதை கணவன் மனைவியிடையே நிகழும் பாசாங்கற்ற அன்பின் வெளிபாட்டை கூறுவதை உள்ளது.
தீராத நோயினால் அவதியுறும் செல்லம்மாள் தன் சாவை எதிர்நோக்கும் ஒரு நாளில் தன் கணவர் பிரம்மநாயகம் பிள்ளையுடன் செலவிடும் பொழுதே இக்கதை.பிறந்த ஊரில் பிழைக்க வழியின்றி சென்னை பட்டணம் வந்து வறுமையில் வாடும் இத்தம்பதியினர் செள்ளமாளின் நோயின் கொடுமையால் மேலும் அல்லல் உற்று நாட்களை கடத்துகின்றனர்...துணி கடை ஒன்றில் பணிபுரியும் பிரம்மநாயகம் பிள்ளை நோயால் வாடும் தன் மனைவிக்கு கடன் பெற்று புடவை வாங்கி வந்து நிறைவு காண்பது,எப்போதும் சோர்த்து இருக்கும் அவளை உற்சாகம் ஊட்ட அவளுக்கு விருப்பம் மிகுந்த இறந்த அவளின் தாயை தன்னுள் கொண்டு பேசுவது,அவளுக்கான உணவை தானே சமித்து தருவது என..நிகரற்ற கணவனை வாழ்ந்து செல்லமாளின் இரைபையும் இளைபாய் ஏற்று கொள்கிறார்..கதை முழுதும் ஒரு கனத்த மௌனம் நிலவுகிறது..அதை நிகழ போகும் மரணத்தின் குறியீடாய் சொல்லலாம்...
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ponnaharam- it is amazing that 1930's he wrote this story. what a forward thought he had! hats off sir.. thank you leka for writing these. person like me it is news. though i want to read Tamizh books, i spend most of my time with my friends.you blog gives me an opportunity to read those books in short span.. thanks.
kadavulum kandasamy pillayum- some of the present movies they have taken this basic story... i dont know they have announced this in that movies. but when we read these stories, it is explicit.good way of naration leka..
Hi Venki...Thanks for your comments.Puthumaipithan is consider to be the God father of tamil story telling world..His stories would be amazing with lots of message n ofcourse fun..Keep reading this blog for more tamil..Its purely dedicated for tamil literature...
//Its purely dedicated for tamil literature...//
யதேச்சையாகத்தான் உங்கள் பதிவிற்கு வந்தேன். புதுமைபித்தன் பற்றிய உங்கள் பதிவுதான இதை எழுத தூண்டியது. புதுமைபித்தனின் தீவிர வாசகன் என்ற முறையில் வாழ்த்துக்கள். இருந்தாலும் அவரது கதைகள் பற்றி சுருக்கமாகவே எழுதி உள்ளீர்கள். அவரது பல கதைகள் விரிவாக எழதப்பட வேண்டியவை.
நானும்கூட சில கதைகள் பற்றி எனது பதிவில் எழதி உள்ளேன்.
தொடர வாழ்த்துக்கள்.
நன்றி ஜமாலன்,
புதுமைபித்தனின் கதைகள் கருத்தாளமும் ஹாசியமும் மிக்கவை..1940 களில் பெரும் முற்போக்கு சிந்தனை கொண்டு ஒரு எழுத்தாளன் தமிழகத்தில் வாழ்ந்தான் என்பதே நினைந்து மகிழ வேண்டிய ஒன்று..புதுமை பித்தனின் ஒவ்வொரு கதையும் படிக்கும் பொழுது அந்த எழுத்தாளனை எண்ணி வியக்காத கனமில்லை..உங்கள் பதிவுக்கு நன்றி.
நன்றி வெங்கி,
//ponnaharam- it is amazing that 1930's he wrote this story. what a forward thought he had! hats off sir..//
பொன்னகரம்...இச்சிறுகதை எனக்கே பெரும் ஆச்சர்யத்தை தந்தது..ஜெயகாந்தன் 1970 களில் கூறியதை அழுத்தமாக 1930 களில் புதுமைபித்தன் போகிற போக்கில் ஒரு சிறுகதையில் கூறி சென்று இருக்கிறார்....என்றும் வணக்கத்திற்குரிய எழுத்தாளர் அவர்.
//kadavulum kandasamy pillayum- some of the present movies they have taken this basic story... //
"கடவுளும் கந்தசாமி பிள்ளையும்" சிறுகதை தமிழின் முதல் அறிவியல் சிறுகதை..பல்வேறு நாடகங்களும்,த்க்திரைபடங்களும் அதனை அடிப்படையாய் கொண்டு எடுக்க பட்டன..நகைச்சுவை மிகுந்த நிதர்சன நிகழ்வே அக்கதை..
மிக நல்ல பதிவு ,
புதுமைபித்தனின் எழுத்துக்கள் விமர்சனம் , கருத்தியல் இவைகளைத் தாண்டி பல விவாதங்களுக்கு நம்மை இட்டு செல்ல கூடியவை ,
புதியவர்களுக்கு புதுமைபித்தன் குறித்த அறிமுகமாக உங்கள் பதிவு இருக்கும் .
மிக்க நன்றி அதிஷா :-)
Do You know that Sri Veda sahaya kumar has done his thesis on Pudamaippthanum Jayakanthanum oru oppu and got his Phd. Incidently both are from South Arcot (presently Cuddalore district).
Post a Comment