நாவலை காட்டிலும் சிறுகதை தொகுப்புகள் படிப்பதற்கு இலகுவாய் இருப்பவை.நீண்ட நேர பிரயத்தனம் இன்றி சிறு சிறு நிகழ்வுகளின் முடிவுடன் வாசிப்பை தொடரலாம்.
எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை தொகுப்புகள்..
வேட்டி - கி.ராஜநாராயணன்.
அக்பர் சாஸ்த்ரி/ சிகப்பு ரிகஷா - தி.ஜானகிராமன்
குரு பீடம் - ஜெயகாந்தன்
தாமிரபரணி கதைகள் - வண்ணநிலவன்
கனிவு - வண்ணதாசன்
இந்த வரிசையில் நான் சேர்க்க விரும்புவது சாருவின் நேநோ சிறுகதை தொகுப்பு.இதுவரை வாசித்திராத வகை கதையாடல்கள்.சராசரி சிறுகதைகளை போலே அல்லாமல் இயல்பாய் அமைந்த கதை சொல்லும் போக்கு அருமை.பெரும்பாலான கதைகள் சாருவின் நேரடி அனுபவங்களே...நெருக்கடி மிகுந்த டெல்லி வாழ்கை,நாடக அனுபவம் என தொகுப்பு முழுதும் தான் கண்டு ரசித்த,வெறுத்த,மகிழ்ந்த நிகழ்வுகளை பதிவு செய்துள்ளார்.the joker was here...முற்றிலும் மாறுபட்ட சிறுகதை..கதையின் போக்கு வாசகனை கட்டிபோடுகின்றது .ரங்கையன் கோட்டை ஒரு அமானிஷ்ய அனுபவத்தை தருகின்ற கதை..இது புதுமை பித்தனின் காஞ்சனை கதையை ஒத்தது.ப்ளாக் நம்பர்: 27திர்லோக்புரி நெருக்கடி மிகுந்த நடுத்தர வர்க்கத்தினரின் நிலையை அப்படியே படம் பிடித்து காட்டும் உண்மை அனுபவம்.என் முதல் ஆங்கில கடிதம்...சாருவின் நாடக வேட்கையையும் மதுரையில் பெற்ற கசப்பான அனுபவங்களையும் விவரிக்கின்றது.மயக்கம்..சிறுகதை சுஜாதா பாணி கதையாடல்..tragedic ending story..இவ்வாறு ஓவ்வொரு கதையும் நிஜங்களின் பதிவாய் இயல்பாய் அமைந்துள்ளது..
Wednesday, May 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மதுரைப்பொண்ணு லேகா !
உங்களின் பிளாக் - தொகுப்பு அருமை. இன்னும் எழுதலாமே....!
நிச்சயமாக எழுதுவேன் தங்கவேல், அலுவலக பணிக்கிடையில் எழுத போதிய நேரமில்லை..:-(
Post a Comment