Thursday, April 24, 2008

ரெய்நீஸ் ஐயர் தெரு

கல்லூரி இறுதி ஆண்டில்,நண்பர்கள் அனைவரும் சேர்ந்து தூத்துக்குடியில் இருந்த விடுதி தோழியான ஜெயந்தியின் வீட்டுக்கு சென்று இருந்தோம்..தூத்துக்குடியில் இருந்து ஒன்றரை மணி நேர பயணத்தில் அமைந்த ஒரு சிறிய அழகிய கிராமம் அது.அவள் வீடு இருந்த தெருவிற்குள் நுழைந்ததும் ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டேன்..அதன் அமைப்பை பார்த்தும் வண்ணநிலவனின் ரெய்நீஸ் ஐயர் தெரு நினைவில் வந்து மறைந்தது.. வண்ணநிலவனின் மற்றுமொரு அற்புத இலக்கிய படைப்பு ரெய்நீஸ் ஐயர் தெரு.ஆறே வீடுகள் அமைந்த ஒரு அழகிய தெருவின் மாந்தர்களை சுற்றியே இந்த கதை நிகழ்கின்றது.




டாரத்தி, அன்னமேரி, இருதயம், தியோடர், சாம்சன், பிலோமி,ஆசிர்வாதம் பிள்ளை, எபன் என கதை மாந்தர்களின் அன்றாட நிகழ்வுகளும்,அவர்களுக்குள்ளான உறவுகளும் அழகாய் கதை முழுதும் விரவி உள்ளது. மகிழ்ச்சியோ, சோகமோ,காதலோ,குரோதமோ,வன்மமோ எதுவுமே மிகை படுத்த படாமல் அவர் அவர் போக்கில் கதை செல்கிறது..

ரெய்நீஸ் ஐயர் தெருவிற்கும் மழைக்குமான தொடர்பு அற்புதமானது..மழை பெய்து முடித்த ஒரு நாளில் டாரதி தன் வீட்டு வாசலில் அமர்ந்து இருப்பதை தொடங்கும் கதை மழை பெய்து கொண்டு இருக்கும் ஒரு மாலை பொழுதோடு நிறைவுபெறுகிறது.இக்கதையில் கதை மாந்தர்களோடு மழை,பொருட்காட்சி,கால்வாய், வீட்டின் படிக்கல் என யாவும் உயிர் பெற்று உலவுகின்றன.கல்யாணி என ஒரு கதாபாத்திரம்..ரெயநீஸ் ஐயர் தெரு மக்கள் யாவருக்கும் ஒரு உற்ற நண்பன் போல..நிச்சயமாய் சொல்லுவேன் அது வண்ணதாசனை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட பாத்திரம் என்று.அவர்தம் கதைகளை போலவே..அவரது பாத்திர படைப்பும் அருமை...மாலை நேர மழையின் போது பருகும் தேநீர் போல ரசிக்கத்தக்க நாவல் இது..

2 comments:

KARTHIK said...

உங்களின் புகைப்படம் மிக அருமை
உங்களுக்கு போட்டோ கிராப்பியில் விருப்பம் இருந்தால் இந்த தளத்தில் பங்கு பெறலாம்.தமிழில் புகைப்படக்கலை

begger said...

Hi,
Few weeks ago there was a painting sales in my office building. All Greece scenarios. The above photo looks like same. Is it the same street you are talking about here?

RB