Sunday, February 28, 2010

சில குறும்படங்கள்..

சமீபத்தில் இணையத்தில் ரசித்த சில குறும்படங்கள்!!

1.Colours Sky - மஜீத் மஜித்தின் இக்குறும்படம் 2006ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்காக எடுக்கப்பட்டது
உற்சாக முகங்கள்,பரவி கிடக்கும் வண்ணங்கள என இக்குறும்படம் ஒரு தேசத்தின் புன்னகையை வெகு இயல்பாய் பதிவு செய்துள்ளது.

http://www.youtube.com/watch?v=POY3G7_Uxfs

2.Revestriction -1990 ஆண்டு கேன்ஸ் விழாவில் விருது பெற்றுள்ள குறும்படம்.

http://www.youtube.com/watch?v=3S8Tskmp_CA

3.Wrong side of the bed - நகைச்சுவையாய் இரு வேறு சாத்தியங்களை ஒற்றை புள்ளியில் இணைக்கும் முயற்சி.

http://www.youtube.com/watch?v=uR_PzFZgsHU&feature=related

4.Some Contemplations - இந்திய குறும்படம்

http://www.youtube.com/watch?v=KX2PeXzLscU

5.முரளி மனோகரின் "கர்ண மோட்சம்" - நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பார்த்த பொழுது,வேறு பல புரிதல்கள் கூடவே அழிந்துவரும் நாட்டுபுற கலைகள் குறித்த கவலையை அதிகரிக்க செய்தது.இக்குறும்படம் தொடர்ந்து பெற்று வரும் மாநில மற்றும் தேசிய விருதுகள் முரளி மனோகரின் அடுத்த படைப்புகள் குறித்த ஆர்வத்தை கூட்டுகின்றது.வாழ்த்துக்கள்!!!


பகுதி ஒன்று -

//www.youtube.com/watch?v=3W87_I79JKA

பகுதி இரண்டு -

//www.youtube.com/watch?v=PgcqGpl3OqM&feature=related

16 comments:

ஈரோடு கதிர் said...

//Some Contemplations//

Excellent

பிச்சைப்பாத்திரம் said...

ஆகா! எஸ்.ரா. ரேஞ்சுக்கு இருக்கிறது பதிவு. :-)

(நகைச்சுவைக்காக எழுதினது. சீரியஸாக எடுக்காதீர்கள்).

கிருஷ்ண மூர்த்தி S said...

கர்ணமோட்சம் குறும்படத்தைப்பற்றி ஜெயா டிவியில் பார்த்து விட்டு, எஸ்ரா வலைத்தளத்தில் சுட்டியைப் பிடித்து இரண்டு பகுதிகளாகப் பார்த்தேன்.

அழிந்து வரும் கலை என்று பேச மட்டும் தான் செய்கிறோம். ஏன் அது அழிவுக்குப் போகிறது என்பதைக் கொஞ்சம் யோசித்திருக்கிறோமா? காலத்துக்கேற்றபடி வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் மாற்றிக் கொள்ளாத கலைவடிவம் நாளடைவில் மறந்து தான் போகும்.

தொலைக் காட்சி சீரியல்கள் வந்து மேடை நாடகங்களைக் காணாமல் பண்ணிய மாதிரி!

மேடை நாடகங்களிலேயே பரீட்சார்த்தமான முயற்சியை செய்து பார்த்த கோமல், ஆர் எஸ் மனோகர் மாதிரி ஆர்வலர்கள் இல்லாதபோது, பழையபடி பவளக்கொடி, அல்லி அர்ஜுனா என்று சங்கரதாஸ் சுவாமிகள் வசனத்தை ஒப்புவிக்கும் நாடகங்கள் எத்தனை நாள் நிலைக்கும் என்று நம்புகிறீர்கள்?

கலைகள் பிழைத்திருப்பது அதைப் பார்க்க முன்வரும் ஆர்வலர்களின் கைகளில் மட்டுமே இருக்கிறது.

லேகா said...

நன்றி கதிர்

Unknown said...

குறும்படத்தை விரும்பி நேசிப்பவன் நான் .
இரண்டரை மணிநேர விசயத்தை பதினைந்து நிமிஷத்தில் புரிய வைப்பது
சாத்தியமற்றது . அதை கர்ணமோட்சம் குறும்படம் உடைத்தெறிந்தது .
எஸ்ராவின் பதிவில் கர்ணமோட்சம் குறும்படத்தை பற்றி ஏற்கனவே அறிந்து
பார்த்து உருகி திரிந்திருக்கிறேன் . உங்கள் தளத்தின் வாயிலாக அந்த எண்ணங்கள் மீண்டும்
அடி மனதில் இருந்து
உயிர்திருகிறது .
நல்ல வலைத்தளம்
நான் பின் பற்றுவதற்கான அதாவது என்னை ஒத்த எண்ணம் கொண்ட
வலைத்தளம்
மனதிற்கு மகிழ்ச்சியாய் உள்ளது
வாழ்த்துக்கள்
தோழி
நீங்கள் தோழராக இருப்பின் மதுரை ஸ்டைலில் பாஸ் என அழைத்திருப்பேன்
தோழியாய் உள்ளீர்கள் .
மரியாதையாக தோழி என்றே கூப்பிடுகிறேன்

என்றும்
உண்மையுள்ள ,
தேடலுடன் தேவராஜ் விட்டலன்
http://vittalankavithaigal.blogspot.com/
vittalan@gmail.com

லேகா said...

சுரேஷ்,

எஸ்.ரா வின் வலைதளத்தில் குறிப்பிட்டிருந்த குறும்படங்களை தேடிய பொழுது கிடைத்தவையே இவை. :-)))))


நன்றி.

லேகா said...

கிருஷ்ணமூர்த்தி,

//கலைகள் பிழைத்திருப்பது அதைப் பார்க்க முன்வரும் ஆர்வலர்களின் கைகளில் மட்டுமே இருக்கிறது.//

நிச்சயமாக.பூனைக்கு மணிகட்டுவது யார் என்பது தான் கேள்வி.பெரு நகரங்களில் கிராமப்புற கலைகளை காணும் ஆர்வம் இருந்தும் அதை முனைப்பாய் செயல்படுத்த ஆர்வலர்கள் குறைவு. அவ்வகையில் சென்னை சங்கமம் நல்ல முயற்சியாகவே தோன்றுகின்றது.

விரிவான உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

லேகா said...

நன்றி தேவராஜன்

ராம்ஜி_யாஹூ said...

ரஜினி கமல் சினிமா தவிர வேற படங்கள் பாக்க பொறுமை இல்லை.
மனதும் கண்களும் கிணத்து தவளையாக சுருங்கி விட்டது என நினைக்கிறேன்.

நீங்கள் சிறந்த படங்கள் தான் குறிப்பிட்டு இருப்பீர்கள். எனவே மனதில் ஆசை வரும் பொழுது கண்டிப்பாகா பார்க்கிறேன் லேகா.

jeba said...

கர்ணமோட்சம் பற்றி விகடனில் பார்த்தவுடனே அதை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன், மேலும் ஜெயா டிவியில் அதை பார்த்த பின்பு தான் அதன் முழு அர்த்தத்தை உணர முடிந்தது...!

இந்த மாதிரி கலைகள் பற்றி நிறைய ஆவண மற்றும் குறும்படங்கள் வரவேண்டும், நாமும் அதை ஆதரிக்க வேண்டும்...



நன்றி லேகா....



---ஜெபா

மாதவராஜ் said...

பகிர்வுக்கு நன்றி லேகா.

லேகா said...

ராம்ஜி,

என்னளவில் ரஜினி,கமல் படங்கள் பார்ப்பதற்கு தான் பொறுமை அவசியம் :-))

லேகா said...

நன்றி ஜெபா.

எஸ்.ராவின் "இலைகளை வியக்கும் மரம்" கட்டுரை தொகுதி கிடைத்தால் வாசித்து பாருங்கள்.அழிந்து வரும் கிராமிய கலைகள் குறித்து விரிவாய் சொல்லி இருப்பார்.

கர்ண மோட்சம் குறும்படத்தில்
எஸ்.ராவின் பங்கு மிகப்பெரியது.

லேகா said...

நன்றி மாதவராஜ் :-)

விஷ்ணுபுரம் சரவணன் said...

தோழமை லேகா..

கர்ணமோட்சம் நான் பார்த்திருக்கிறேன். முரளி எனக்கு நண்பரும் கூட.. மிக அரிதாக நிகழ்கிற முயற்சி அவருடையது.

பத்தாண்டுகளுக்குமுன் குறும்படம் என்றால் வெகுவாக இயங்கிக்கொண்டிருக்கும் தோழர்களுக்கே கூட தெரியாது. குறும்படத்திற்கான எல்லையை மிக அர்ப்பணிப்போடு மிக சிலர் விரிவாக்கியுள்ளனர். அது பாராட்டுக்குரியது. குடந்தையில் தோழர் லீனாவின் படங்களை 5 ஆண்டுகளுக்கு முன் திரையிட்டு விவாதித்தோம். நிழல், பதியம், காஞ்சனை உள்ளிட்ட திரையியக்கத்தின் முயற்சிகள் முக்கியமானவை. எங்கள் கிராமத் திருவிழாவில் குறும்படம் திரையிடுகிற துணிச்சலை இம்மாதிரியான திரை இயக்கமும் தோழர் திருப்பூர். பாரதிவாசனும்தான் தந்தனர். இப்படியான அதன் எல்லைவிரிவாக்கத்தில் வணிக தொலைக்காட்சிகளின் குறுக்கீட்டால் குறும்படம் என்பது குறுகிய நேரம் ஓடவும் எடுக்கவும் படக்கூடியது எனும் விதமான எண்ணத்தை விதைத்துவருவதை என்னவென்று சொல்ல. கலைஞர் தொலைக்காட்சி நாளைய இயக்குநர் நிகழ்ச்சி பார்க்கையில் எவ்வித எதிர்ப்பார்பின்றி அலைந்த/ அலைந்துக்கொண்டிருக்கும் தோழர்களின் உழைப்பை காலில் போட்டு மிதிப்பது போலத்தான் இருக்கும்.

குறும்படம், ஆவணப்படம் என்பது மாற்றுத்திரைக்களம் எனும் நோக்கம் அந்நிகழ்ச்சியில் துளியும் கிடையாது. அதிலும் அந்த நடுவர்களின் கருத்துகள் .. போதுமடா சாமி ஆளை விடு எனும் அளவில்தான்..

கூர்மையான ஆயுதத்தை மழுங்கடிக்கும் வேலையை திறம்படசெய்கின்றனர்.
ஏதோ எழுத ஆரம்பித்து தானாக ஒட்டிக்கொண்ட ஆதங்கத்தால் வேறுதிசைக்கு இழுத்துச்சென்றுவிட்டது.

விஷ்ணுபுரம் சரவணன்

லேகா said...

விரிவான பகிர்தலுக்கு நன்றி சரவணன்.

தனிமடலில் இது குறித்து விரிவாய் உரையாடலாம்.