Sunday, October 11, 2009

நையாகரா(1953 )

கருப்பு வெள்ளை ஆங்கில திரைப்படங்கள் மீதான ஆர்வம் எப்போதும் எனக்கு குறைந்ததில்லை.அந்த காலகட்டத்தில் தொழில் நுட்பம் அவ்வளவாய் முன்னேற்றம் அடைந்திடாதபோதிலும் வெகு நேர்த்தியாய் காட்சிகளை அதீத தரத்துடன் படம்பிடித்து இருப்பர்.சமீபத்தில் பார்த்து அசந்த திரைப்படமான 'நயாகரா' அவ்வகையை சேர்ந்ததே.பிரபஞ்ச அழகிகள் பட்டியலில் நிரந்தர இடம் பெற்றிருக்கும் மர்லின் மன்றோ நடித்துள்ள இப்படம் த்ரில்லர் வகையை சேர்ந்தது.ஒரு வகையில் ஹிட்ச்காக் படங்களின் சாயலை ஒத்திருந்தது.

அளவற்ற அன்பில் திளைத்திருக்கும் கட்லர் தம்பதியினர் மூன்று ஆண்டுகள் கழித்து தமது தேனிலவை கொண்டாட நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள விடுதியில் தங்கிட செல்கின்றனர்.அங்கே அவர்கள் லூமிஸ் தம்பதியினரை சந்திக்க நேர்கின்றது.ஜார்ஜ் லூமிஸ், ரோஸ் லூமிஸ்(மர்லின் மன்றோ) யை விட பல வயது மூத்தவன்..மனைவி மீது அதீத அன்பு கொண்டவன்..கொஞ்சம் உணர்ச்சி வசபடகூடியவனும் கூட.பேரழகியான ரோஸ் கணவனை விட்டு வேறு ஒரு இளைஞனோடு காதல் கொண்டிருக்கின்றாள்.ரோசின் இந்த போக்கினை குறித்து ஜார்ஜ் கட்லர் தம்பதியினரிடம் வருந்தும் காட்சி அவன் தன மனைவி மீது கொண்டிருக்கும் உண்மை காதலை எடுத்துரைக்க போதுமானாதாய் இருக்கின்றது.



ரோஸ் தம் காதலனோடு சேர்ந்து கணவனை கொல்ல சதி செய்ய..பெரும் திருப்பமாய் காவல்துறையினர் கண்டுபிடிப்பதோ அவளின் காதலனின் உடலை.
தேனிலவு கொண்டாட்டங்களை விடுத்து கட்லர் தம்பதியினர் இந்த கொலை வழக்கில் சிக்கி கொள்ள..ரோசின் மரணத்திற்கு பிறகு உண்மைகள் மெல்ல வெளிவருகிறது.அப்பாவி கணவனான ஜார்ஜின் முடிவு சோகமானது.

இத்திரைப்படத்தில் என்னை வெகுவாய் கவர்ந்தது மூன்று விஷயங்கள்..ஒன்று மர்லின் மன்றோ...சொக்க வைக்கும் பார்வையில் ஒய்யாரமாய் நயாகரா வீழ்ச்சியின் பின்னணியில் இவர் நடந்து வரும் அழகை பார்த்து கொண்டே இருக்கலாம்..இரண்டு,நயாகரா..படத்தில் 95 சதவீத காட்சிகள் நயாகாரா நீர்வீழ்ச்சியின் பின்னணியிலேயே எடுக்கபட்டுள்ளது.நையகராவின் பிரமாண்டத்தை முழு திரையில் பார்க்க ஆர்வம் கூடியது.மூன்று..காட்சியமைப்பு..கருப்பு வேலை காலத்திலும் கலக்கியவர் என ஹிட்ச்காக்கை சொல்லுவர் அந்த அளவிற்கு தொழில்நுட்பத்தில் மிரட்டி இருப்பார்.இந்த திரைப்படமும் அந்த வகையில் மிக சிறந்ததே.

1953 இல் வெளிவந்த இந்த திரைப்படம் வசூலை வாரி குவித்துள்ளது என்பதில் வியப்படைய ஒன்றுமில்லை.காதலை இருவேறுவிதமாய் சொல்லியும்,நயாகராவின் பிரமாண்டத்தை வெகு அழகாய் படம்பிடித்து காட்டியுள்ள விதமும் வெகு அருமை..த்ரில்லர் படங்கள் உங்களுக்கு பிடிக்குமாயின் தாராளமாய் இதை பரிந்துரைப்பேன்.

13 comments:

KARTHIK said...

// கருப்பு வெள்ளை ஆங்கில திரைப்படங்கள் மீதான ஆர்வம் எப்போதும் எனக்கு குறைந்ததில்லை //

கதை நல்லா இருந்த கலர் தெரியாதுதான
நல்ல பதிவுங்க.

லேகா said...

நன்றி கார்த்திக்.

செ.சரவணக்குமார் said...

அருமையான பதிவு. பகிர்ந்ததற்கு நன்றி. எனக்கும் கருப்பு வெள்ளை ஆங்கில திரைப்படங்களின் மீது தீராத ஆர்வம் உண்டு.

லேகா said...

நன்றி சரவணகுமார்..:-)

Krishnan said...

எனது மனம்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்

குப்பன்.யாஹூ said...

திரைப் படம் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.

எனது நெஞ்சம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

அகநாழிகை said...

நல்ல பகிர்வு.

- பொன்.வாசுதேவன்

லேகா said...

Belated Wishes Krishnan:-)

லேகா said...

நன்றி ராம்ஜி :-)

ஆர்குட்டில் உங்களுக்கு பதில் அளித்து உள்ளேன்.

லேகா said...

நன்றி வாசு

Sanjai Gandhi said...

நல்ல ரசனை தான்.. :)

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

தேடி பார்க்க வேண்டும் இந்த திரைப்படத்தை. நிறைய கதை அமைப்புள்ள நல்ல திரைப்படங்கள் கருப்பு வெள்ளையில் இருந்தாலும் - டிவிடியில் சரியான தரத்தில் இல்லாமல் இருக்கிறது - சிலவற்றில் சப்-டைட்டில் கிடையாது.. இணையத்தில் தேடி ஒரிஜினல்தான் வாங்க வேண்டும்..!!

Joe said...

நேரம் கிடைக்கும்போது தரவிறக்கம் செய்து பார்க்கிறேன்.

பகிர்வுக்கு நன்றி.