Saturday, April 18, 2009

சிவராமகரந்தின் "அழிந்த பிறகு" - கன்னட மொழிபெயர்ப்பு

கன்னட இலக்கியத்தில் யு.ஆர்.அனந்தமூர்த்தியின் எழுத்துக்களை தீவிரமாய் வாசித்ததுண்டு.பாவண்ணனின் "நூறு சுற்று கோட்டை" தொகுப்பின் மூலம் கன்னடத்தின் மிக சிறந்த எழுத்தாளர்கள் குறித்த அறிமுகம் கிடைத்தது.இந்நாவல் படித்த முடித்த பின் அந்த தேசத்தின் இலக்கியம் மீதான தேடலும்,ஆர்வமும் அதிகரித்து.சிவராமகரந்த் குறித்து இணையத்தில் தேடிய பொழுது கிடைத்த தகவல்கள் எண்ணற்றவை.எழுத்தோடு இசையும்,ஓவியமும் இவரின் தனி சிறப்புக்கள்.மேலும் மிகச்சிறந்த சமூக போராளியாய் இருந்துள்ளார்.



உங்கள் கடைசி ரயில் பயணத்தில் சந்தித்த நபர்களை குறித்து கேட்டால் சட்டென சொல்ல இயலுமா?பொதுவாய் நம்மிடையே முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களோடு பயணத்தின் பொழுதோ,எதிர்பாரா சந்திப்புகளிலோ பேசுவது என்பது அரிதான ஒன்று.அபூர்வமாய் கிடைக்கும் சில சிநேகங்கள் இறுதிவரை தவிர்க்க முடியாததாகி விடுவதுண்டு. சிவராமகரந்தின் இந்நாவல் பயணிப்பது ரயில் பயணத்தின் பொழுது அறிமுகமான தனது தன் நண்பனின் கடந்த கால நினைவுகளை தேடி..அவனின் மரணத்திற்கு பிறகு!!

மரணத்திற்கு பிறகான மனிதனின் வாழ்கை நிறைவு பெறுவது அவன் விட்டு சென்ற நினைவுகள் அர்த்தம் பெரும்பொழுது.ரயில் பயணத்தில் அறிமுகமான நண்பரின் மரணத்தை தொடர்ந்து தனிமையில் தங்கி இருந்த யசுவந்தரின் மும்பை வீட்டுக்கு செல்கின்றார்.யசுவந்தரின் ஓவிய குறிப்புகளும் தொடர்ந்து அவர் பணம் அனுப்பி வந்த சிலரின் முகவரிகலுமே மிஞ்சி இருக்க...அம்முகவரி மனிதர்களை தேடி கர்நாடக கிராமம் ஒன்றிற்கு செல்கிறார்.இவ்விருவருக்கும் இடையே வெகு சில சந்திப்புகளே நிகழ்த்திருந்த பொழுதும் இருவரின் நட்பின் ஆழம் ஒருவரின் மரணத்திற்கு பின் கூடுகின்றது.

சிவராமகரந்தின் பயணம் நினைத்ததை போல அவ்வளவு சுலுவாய் இல்லை.யசுவந்தர் குறித்து வைத்திருந்த அனைவருமே அவரின் நெருங்கிய உறவினர்கள்.யசுவந்தரின் வளர்ப்பு தாய்,அவரின் மகள்,மகன்,இரண்டாவது மனைவி அவரின் குழந்தைகள் என விட்டு பிரிந்து வந்த தனது சொந்தங்களுக்கு தனிமையை தேடி வந்த பொழுதும் மறக்காது பணம் அனுப்பி அவர்களின் நினைவுகளில் நிரந்தர இடம்பிடித்துள்ள நண்பரை எண்ணி பெருமிதம் கொள்வதோடு அவர்களின் ஒவ்வொருவரின் ஆசைகளையும்,தேவைகளையும் அறிந்து உதவி செய்து திரும்பிகின்றார்.மற்றொரு சிறப்பான விஷயம் யசுவந்தர் தமது உறவுகளை குறித்து வரைந்து வைத்து சென்ற ஓவிய குறியீடுகள்.மனிதர்களை பறவைகளோடு,மிருகங்களோடு,மரம் செடிகளோடு ஒப்பிட்டு அவர்களின் இயல்பினை விளக்குவதை உள்ளன அவ்வோவியங்கள்.

மொழிபெயர்ப்பு என்கின்றன நெருடல் ஏதும் இன்றி வெகு நேர்த்தியாய் உள்ளது இந்நாவல்.

வெளியீடு - நேசனல் புக் டிரஸ்ட்
மொழிபெயர்ப்பு - சித்தலிங்கையா

18 comments:

குப்பன்.யாஹூ said...

கிர்ந்தமைக்கு நன்றி.
கிரீஸ் கர்னாட்டின் பேட்டியில் கேள்வி பட்டு இருக்கிறேன், சிவராம் காந்த், ஆனந்த மூர்த்தி படித்தது இல்லை.

இனைய இணைப்புக்கள் இருந்தால் பகிரவும்.

குப்பன்_யாஹூ

Anonymous said...

Nice intro. Have not read this book ,but as you have mentioned he was also a social activist. He did quite a bit for conserving 'Yakshagana' karnataka's main art form. His son is involved in preservation of tigers in india.

Karnataka has a legacy of writers who are also social activists form Kuyembu, Karanth to Ananthamoorthy now.
Ajay

லேகா said...

நன்றி ராம்ஜி.

இணைய இணைப்புகள் எதுவும் தெரியவில்லை.கூகுளில் தேடி பார்த்தேன்..

லேகா said...

@Ajay

//He did quite a bit for conserving 'Yakshagana' karnataka's main art form. His son is involved in preservation of tigers in india//

Great info Ajay..tnx for sharing!!

Jags said...

//மரணத்திற்கு பிறகான மனிதனின் வாழ்கை நிறைவு பெறுவது அவன் விட்டு சென்ற நினைவுகள் அர்த்தம் பெரும்பொழுது.
அருமையான வரிகள்.
அவன் இறந்தாலும், அவனுடைய கனவுகள் இறப்பதில்லை.

Jags said...

தங்களின் வலைப்பூ பற்றி ஒரு சிறு பதிவு.
http://kaatrinmozhi.blogspot.com/2009/04/blog-post_20.html

லேகா said...

வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி ஜக்ஸ்.

யாத்ரா said...

நல்லதொரு அறிமுகத்தைச் செய்திருக்கிறீர்கள். இதுவரை கன்னட இலக்கியங்களோடு எந்த பரிச்சயமும் எனக்கு இல்லை, அனந்தமூர்த்தியைக் கூட கேள்விப்பட்டிருக்கிறேன் படித்ததில்லை, படிக்க ஆவலோடு இருக்கிறேன், அனந்தமூர்த்தி அவர்களின் படைப்புகளின் சில பிரதிகளின் பெயர்களை குறிப்பிட்டால் உதவியாக இருக்கும்.

கே.என்.சிவராமன் said...

யாத்ரா,

யு. ஆர். அனந்தமூர்த்தி உலகளவில் புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர். ஞானபீட விருது பெற்றவர். 'சமஸ்காரா' (தமிழாக்கம், தி.சு. சதாசிவம், காவ்யா வெளியீடு), 'அவஸ்தை'(தமிழாக்கம் தமிழவன்; அரசியல் சார்ந்த நாவல் இது; அன்னம் (அகரம்) வெளியீடு), 'பாரதிபுரம்' (தமிழாக்கம், தி.சு. சதாசிவம், கோயில் நுழைவுப் போராட்டத்தை மையமாக கொண்ட நாவல் இது; அம்ருதா வெளியீடு)... என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

இவர் கன்னடத்தில் நவ்யா [நவீனத்துவ] இயக்கத்தை உருவாக்கிய முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவர். எக்ஸிஸ்டென்ஷியலிச (இருத்தலியல்வாதம்) தாக்கம் இவரிடத்தில் அதிகமாகவே உண்டு.

அனந்தமூர்த்தியின் நாவல்களில் 'சமஸ்காரா' திரைப்படமாகவும் வந்திருக்கிறது.

இந்தியிலும், தெலுங்கிலும் திரைப்படமாக வந்த இவரது 'கடஷ்ரதா' குறித்து 'யாழிசையில்' லேகா ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.

http://yalisai.blogspot.com/2008/04/blog-post_5985.html

அனைத்து அரசாங்க நூலகங்களிலும் இவரது படைப்புகள் கிடைக்கின்றன யாத்ரா.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

லேகா said...

நன்றி யாத்ரா.

@பைத்தியக்காரன்
வெகு அருமையாக அனந்தமூர்த்தியின் படைப்புகளுக்கு அறிமுகம் தந்தீர்கள்.

கடஸ்ரேதா,சம்ஸ்கார இரு நாவல்களுமே பெண்களுக்கெதிரான பிராமண ஒடுக்கு முறைகளை கடுமையாய் சாடுபவை.அச்சமூகத்தில் ஊறி போய் இருக்கும் சில சாத்திர சடங்குகளை ஒளிவு மறைவு ஏதும் இன்றி வன்மையாய் கண்டிப்பவை இவரின் எழுத்துக்கள்.

இவரின் கடஸ்ரேதா நாவல் கன்னடம்,ஹிந்தி,மராத்தி மொழிகளில் திரைப்படமாக வெளிவந்துள்ளது.அதுபோலவே இவரின் சம்ஸ்கார நாவலும் கன்னடத்தில் திரைப்படமாய் வந்து பெரும் பேசப்பட்டது.

இவரின் மற்றும் ஒரு நாவல் "அவஸ்தை" ,அரசியல்வாதி ஒருவனின் இறுதி காலத்தில் தன் வாழ்கையை பின்னோக்கி பார்த்து,அவன் கண்ட பெருமைகளையும்,சிறுமைகளையும் விவரிப்பது.

யு.ஆர்.அனந்த மூர்த்தியின் "பாரதிபுரம்" நாவல் எனது தேடல் பட்டியலில் உள்ளது.

யாத்ரா said...

அன்பிற்குரிய பைத்தியக்காரன் அவர்களுக்கு மிக்க நன்றி, அனந்தமூர்த்தி அவர்களின் படைப்புகளை தாங்கள் அறிமுகப்படுத்திய விதம் என்னை சீக்கிரத்தில் தேடி வாசிக்கத் தூண்டுகிறது.

அன்பிற்குரிய லேகா அவர்களின் தகவல்களுக்கும் மிக்க நன்றி. தாங்கள் தந்துதவிய இடைவெளி நாவல் படித்து முடித்து விட்டேன், ஏற்கனவே தோழமையோடு இருக்கும் சாவு இன்னும் மனதிற்கு நெருக்கமாகிவிட்டது வாசித்த பிறகு, மரணம் ஒரு அருமையான அனுபவம், மிக்க நன்றி

Unknown said...

உங்களைப் பற்றி வலைச்சரத்தில் பிரபு எழுதியுள்ளார். சென்று பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2009/04/blog-post_23.html

லேகா said...

நன்றி கிருஷ்ணா பிரபு

லேகா said...

நன்றி யாத்ரா.

சம்பத்தின் "இடைவெளி" யை முற்றிலுமாய் உள்வாங்கி கொள்ள இருமுறை வாசிப்பு எனக்கு தேவைப்பட்டது.

//ஏற்கனவே தோழமையோடு இருக்கும் சாவு இன்னும் மனதிற்கு நெருக்கமாகிவிட்டது//

:-)

யாத்ரா said...

என்ன லேகா, சிரிக்கிறீர்கள், என்னுடைய பதிவுகளை தாங்கள் படித்திருக்கிறீர்களா எனத் தெரியவில்லை, இடைவெளி படித்த பிறகு நான் சாசனம் என்றொரு கவிதை எழுதியிருக்கிறேன் என்னுடைய பதிவில், நேரம் அனுமதித்தால் வாசித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

லேகா said...

யாத்ரா..

அது சிரிப்பு இல்லை,மெல்லிய புன்னகை.சாவு குறித்த உங்களின் கருத்து என்னுடையதோடு பெரிதும் வேறுபடுகின்றது,அதனால் தான்...

கட்டாயம் படிக்கின்றேன் யாத்ரா.

இனியாள் said...

Ungal vaasippu ennai bramikka vaikirathu, kannada mozhipeyarpugal athigam vaasithathu illai, nalla pathivu.

Unknown said...

saw ur blog happy ...... im also frm madurai if u have any sujatha s books please send it to me dhanasekar 9952315761