* * * எஸ்.ரா தனது சமீபத்திய பதிவான "காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம்" இல் காவல் கோட்டம் நூலை துவைத்து,கிழித்து காயபோட்டிருந்தார்.இதுவரை இப்படி ஒரு கடுமையான விமர்சனத்தை எஸ்.ரா எழுதி படித்ததில்லை.இவ்வலைத்தளத்தில் எனக்கு பிடித்த நூல்களை,பரிந்துரைக்க ஏற்ற நூல்களை குறித்து மட்டுமே எழுதி வருகின்றேன்.எஸ்.ரா வின் அந்த காட்டுரை வெகுவாய் யோசிக்க செய்தது.விகடன் விருதுகள் -2008 இல் காவல் கோட்டம் பரிந்துரைக்கபட்டதை குறித்து எஸ்.ரா வருத்தபட்டுளார்.விகடன் விருதுகளை நம்பி வா.மு கோமுவின் "தவளைகள் குதிக்கும் வயிறு" சிறுகதை தொகுப்பை வாங்கி ஏமாற்றம் அடைந்தது நினைவிற்கு வந்தது.
* * * திருநங்கை கல்கியின் வலைபூ குறித்து செந்தழல் ரவியின் பதிவின் மூலம் முதலில் தெரியவந்தது.பொங்கலின் பொழுது வசந்த் தொலைகாட்சியில் கல்கியின் விரிவான பேட்டி காண நேர்ந்தது.வெகு நேர்த்தியாய் தனது குடும்பம்,குழந்தை பருவம்,நண்பர்கள்,காதல், அலுவலக சூழல்,மேடை நாடக ஈடுபாடு குறித்து விவரித்தார்.வித்யாவை தொடர்ந்து கல்கியின் வருகை மகிழ்ச்சி கூட்டுவதாய் உள்ளது.
சகோதரி கல்கியின் வலைத்தளம்
* * * நான் கடவுள் திரைப்படம் குறித்த சாருவின் வெளியிடபடா விமர்சனம் குறித்து சாரு ஆன்லைன் இல் தரப்படும் அறிவுப்புகள்,கேள்விகள்,விளக்கங்கள்....... ஆர்வத்தை விட அயர்ச்சி தருவதாய் உள்ளது.முன்னமே இவை எதிர்பார்த்த ஒன்று தான் எனினும் இந்த அளவு எதிர்பார்கவில்லை :-)
* * * கடந்த ஞாயிறு அன்று பெருத்த எதிர்பார்போடு Slumdog Millionare திரைப்படம் பார்க்க சென்றேன், சுமாரான பாலிவுட் திரைபடத்தை பார்த்து முடித்த ஏமாற்றமே மிஞ்சியது. ஆஸ்கரில் இதனை விருதுகள் வாங்கி குவித்து இருப்பதும்,உலக அரங்கில் இந்தியாவின் பெயர் திரைத்துறை சார்ந்து முன்னிறுத்தபடுவது மகிழ்ச்சியே.திரைப்படம் குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபடாமல் தமிழனுக்கு ஆஸ்கர் கிடைத்ததில் தாராளமாய் மகிழ்ச்சி கொள்ளலாம்.
Tuesday, February 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
தமிழ் மணம் இணைப்பில் ஏற்பட்ட கோளாறினால் மறு பதிவு செய்துள்ளேன்.
ராம்ஜி மற்றும் விக்னேஸ்வரனின் பின்னூட்டங்கள் வெளியிட முடியாது போய் விட்டது மன்னிக்கவும் :-(
எஸ் ரா எழுதி இருந்தால் உண்மையாக சரியாகத்தான் இருக்கும் லேகா. முன்பு அம்பலம் இணைய இதழில் கூட சில சமயம் அவர் காட்டமாக எழுதி உள்ளார்.
விகடன் சமீப காலமாகவே வணிக பத்திரிக்கை ஆகி விட்டது. நானே அடுத்த ஆண்டு இணைய சந்தாவை புதுப்பிக்க வேண்டாம் என முடிவு செய்து உள்ளேன்.
ச்லம்டாக் சினிமா வில் இந்தியாவின் எதார்தாம் தெளிவாக படம்மாக்கி இருந்ததால் தான் இத்தனை சிறப்பு. நீங்கள் அவுத்சொர்செது (outsourced) சினிமா பார்த்து இருக்கிறீர்கள.
என் பார்வையில் பிற ஆஸ்கார் படங்களான டை ஹார்ட், பேன் ஹாட் போன்றவற்றை பார்க்கும் பொழுது ச்லம்டாக் தேவலை ராகம்.
குப்பன்_யாஹூ
வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி ராம்ஜி.
விகடன் குறித்த உங்களின் கருத்தே எனதும்.சென்ற வாரம் "புதிய பார்வை" இலக்கிய (??) இதழ் அப்பா வங்கி இருந்தார்.முழுக்க முழுக்க சினிமா செய்திகள்.சினிமா இல்லையென்றால் தமிழகம் என்ன ஆகி இருக்குமோ??
Slumdog Millionare - எதார்த்த நிலையை சொல்லி இருந்த விதம் பிடிக்கவில்லை.மதூர் பண்டார்கரின் "Traffic Signal" ஒரு அற்புத பதிவு அவ்வகையில்.
எஸ் ரா பதிவு படித்தேன் (காவல் கோட்டம்) , அவர் கூறி இருப்பது சரிதான் போல தோன்றுகிறது. எஸ் ரா பதிவில் பின்னூட்டம் எழுத வழி தெரிய வில்லை.
எப்படி ஸ்ரீரங்கம் எழத சுஜாதா சரியான ஆளோ அதே போல தென் மதுரை பற்றி எழுத சம காலத்தில் எஸ் ரா ஒருவரே சிறந்த எழுத்தாளர்.
இருளாண்டியும் இருபத்தி மூன்று ஆடுகளும் பற்றி எஸ் ரா விமர்சனம் அல்லது எழுதிய ஞாபகம், அது கள்ளர் வாழ்க்கை பற்றியது என நினைக்கிறேன். அதில் கள்ளர் வாழ்க்கை வரலாறு நன்றாக எழுதி இருப்பார்கள்.
குப்பன்_யாஹூ
//தென் மதுரை பற்றி எழுத சம காலத்தில் எஸ் ரா ஒருவரே சிறந்த எழுத்தாளர்.//
ரொம்ப சரி.பயணம் அவரின் பொழுது போக்கு!! கடிகாரம் அமைதியாய் எண்ணி கொண்டிருக்கின்றது தொகுப்பில் எஸ்.ரா குறிப்பிட்டு இருந்த முனைவர்.வேதாச்சலத்தின் "எண்பெருங்குன்றம்" தொகுப்பு எனது விருப்ப பட்டியலில் உள்ளது.மதுரையை சுற்றி அமைந்துள்ள சமண குகைகள் குறித்த ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கியது.
அன்பின் லேகா,
எஸ்.ரா. எழுதிய அந்தக் கட்டுரையை நானும் கீற்றில் பார்த்து அதிர்ச்சியுற்றேன். மெல்லிய பூந்தடவலையொத்த எழுத்துக்கள் எஸ்.ரா.வினுடையவை. அன்று அந்தக் கட்டுரை அவரால் எழுதப்பட்டதுதானா என்ற ஐயத்தை ஏற்படுத்தியது.
விகடனில் பார்த்து வா.மு.கோமுவின் தொகுப்புக்கு நானும் ஆர்டர் கொடுத்து விட்டேன். :(
வருகைக்கு நன்றி ரிஷான்.
//எஸ்.ரா. எழுதிய அந்தக் கட்டுரையை நானும் கீற்றில் பார்த்து அதிர்ச்சியுற்றேன். //
எனக்கும் அதே நிலை.
//விகடனில் பார்த்து வா.மு.கோமுவின் தொகுப்புக்கு நானும் ஆர்டர் கொடுத்து விட்டேன். :(//
வா.மு.கோமுவின் இந்த சிறுகதை தொகுப்பு மனசோர்வை அதிகரித்தது.திருப்பூர் நகரை சுற்றி சுழலும் கதை பெரும்பாலும் வழி தவறிய பெண்களை பற்றியது.பான்பராக் போட்டு கொண்டு,மொபட்டில் செல்லும் ஆண்களுக்கு ஏங்கும் அப்பெண்கள் செய்யும் காரியங்கள் அதிர்ச்சி தருவதாய் சித்தரிக்கப்பட்டுள்ளது.அவை நிதர்சனமாய் இருக்க கூடாது என எண்ணி கொண்டேன். உங்களின் பார்வையில் எப்படி உள்ளது என்பதை அறிய ஆவல்!
வித்யாவை தொடர்ந்து கல்கியின் வருகை மகிழ்ச்சி கூட்டுவதாய் உள்ளது.
//
அறிமுகத்திற்கு நன்றி..
//நான் கடவுள் திரைப்படம் குறித்த சாருவின் வெளியிடபடா விமர்சனம் குறித்து சாரு ஆன்லைன் இல் தரப்படும் அறிவுப்புகள்,கேள்விகள்,விளக்கங்கள்....... ஆர்வத்தை விட அயர்ச்சி தருவதாய் உள்ளது.//
அஃதே!!!
நன்றி நர்சிம் :-))
//வா.மு.கோமுவின் இந்த சிறுகதை தொகுப்பு மனசோர்வை அதிகரித்தது.திருப்பூர் நகரை சுற்றி சுழலும் கதை பெரும்பாலும் வழி தவறிய பெண்களை பற்றியது.//
வழி தவறிய ஆண்கள் பற்றியதும் தான். :)
இத் தொகுப்பு எனக்கு குதுகலத்தை ஏற்படுத்தியது.
"தோழர் இறந்தபின்பு ..", "குட்டி பிசாசு" சிறுகதைகள் சிறந்ததாய் தோன்றியது.
"திரைப்படம் குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபடாமல் தமிழனுக்கு ஆஸ்கர் கிடைத்ததில் தாராளமாய் மகிழ்ச்சி கொள்ளலாம்". கண்டிப்பாக லேகா.
நன்றி கிருஷ்ணன் :-)
//வழி தவறிய ஆண்கள் பற்றியதும் தான். :)
இத் தொகுப்பு எனக்கு குதுகலத்தை ஏற்படுத்தியது.//
:-)) உண்மை தான்.பகிர்தலுக்கு நன்றி.
Hi,
I too am a person who was disappointed by Kaval Kottam. I had read an extract in the magazine 'Thamizhini', which seemed intriguing. But the book was a total disappointment and I have not been able to complete it. It is more like a gazette, with collection of historical facts with the author nowhere to be seen or read.
And I too was greatly suprised by S.Ra's criticism, which though seems harsh, is quite justified in my opinion as a person who has read the novel partially, though I cannot claim to be as good a reader as S.Ra
ஸ்லாம்டாக் நல்லா தானே இருந்தது???
வருகைக்கு நன்றி விக்னேஷ்வரன்.
Slumdog Millionare - அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.மேலோட்டமாய் பார்த்தால் இந்திய பிளாட்பார சிறுவர்களின் வாழ்கையை எடுத்துரைப்பது சிறப்பாய் தோன்றலாம்.எனினும் சொல்லப்பட்டிருந்த விதம் சினிமாத்தனம் மிகுந்து காணப்பட்டது.என்னவோ பிடிக்கவில்லை.Opinion differs!!:-)
பகிர்தலுக்கு நன்றி அனானி.
காவல் கோட்டம் நாவல் நான் படிக்கவில்லை.இருப்பினும் எஸ்.ரா வின் விமர்சனத்தை ஒத்துகொள்ள தான் வேண்டும்.அங்குலம் அங்குலமாய் விமர்சித்திருந்தார்.இவ்வளவு கடுமையான விமர்சனத்தை அவரிடம் இருந்து சற்றும் எதிர்பார்க்கவில்லை.
// திரைப்படம் குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபடாமல் தமிழனுக்கு ஆஸ்கர் கிடைத்ததில் தாராளமாய் மகிழ்ச்சி கொள்ளலாம்.//
அதே அதே
// ச்லம்டாக் சினிமா வில் இந்தியாவின் எதார்தாம் தெளிவாக படம்மாக்கி இருந்ததால் தான் இத்தனை சிறப்பு.//
@குப்பன்
எதுங்க எதார்த்தம் அந்த சின்னப்பசங்க அப்படி ஆனதுக்கு அந்த கலவரம் தான் காரணம காட்டப்படுரதா.
இந்தியான்னாலே விளிம்புதான.
இத எடுத்த அவங்கள சீனாவப்பத்தி இப்படி ஒரு படம் பண்டச்சொல்லுங்க.
ஏன் அஙகெல்லாம் ஸ்லம்மே இல்லையா.
மொதல்ல அங்க இந்த பேரே (ஸ்லம் டாக்)வெக்க உடமாட்டனுங்க.
நன்றி கார்த்திக்.
பிளாட்பார சிறுவர்களின் நிலையை சொல்லி இருக்கும் விதத்தில் எதார்த்தத்தை மீறிய சினிமாத்தனமே மிஞ்சி உள்ளது :-(
யதார்த்தம் என்று எதை வரையறை செய்கிறீர்கள்?
சலாம் பாம்பே?
அல்லது தூர்தர்சன் காலங்களில் வரும் ஒரிய மொழிப் படங்கள்?
ஸ்.மி.ஒரு படத்தின் ஆக்கம்,கட்டமைப்பு என்ற வகையில் மிக நன்றாகவே எடுக்கப்பட்டிருந்ததாகவே தோன்றுகிறது.
நான் இங்கு கண்டெனட் பற்றிப் பேசவில்லை.
அது பற்றிய என் பார்வையும் வேறுதான்.
ஆனால் பட ஆக்கத்தில் அது ஒரு மாசு மறுவற்ற முயற்சி என்று அடித்துச் சொல்லலாம்.
Hi Lekha,
Gudmorning.If u find time try to attend "Thanjai Prakash vizha" @ "Pavazhavizha Arangam- Madras University" if you want to ask any questions or discuss with Vaa.Mu.Komu by 5pm today...
ஆமா...
சாரு படம் காட்டுறாப்புல இருக்கு..
எஸ்.ரா வின் கட்டுரை இன்னமும் படிக்கவில்லை லேகா...
Post a Comment