Thursday, November 6, 2008

பெருமாள் முருகனின் "ஏறுவெயில்"

கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு குடும்பத்தில் ஏற்படுத்தும் இழப்புகளை
மிக விரிவாய் நாயகனின் பார்வையில் சொல்லும் நாவல் "ஏறு வயல்".சமுதாய மாற்றங்களினால் கிராமங்கள் மறைகின்றன,விலை நிலங்கள் அழிகின்றன,குடும்ப உறவுகளுக்குள்ளான பிரியங்கள் பின் தள்ளப்பட்டு பணம் முதன்மை பெறுகின்றது இவை யாவையும் ஒரு குடும்பத்தின் நிகழ்வுகளோடு சொல்லி இருக்கின்றார் பெருமாள் முருகன்.எந்த வித சமரசமும் செய்து கொள்ளாது கையாண்டுள்ள எழுத்து நடை,கோவை வட்டார பேச்சு மொழி நாவலின் எதார்த்த தன்மையை கூட்டுபவை.

காலனி வீடுகள் கட்ட அரசாங்கத்திற்கு தம் வீட்டையும்,விளை நிலங்களையும் விற்றுவிட்டு பிழைக்க வழி தேடி பிரிகின்றனர் பொன்னையனின் உறவினர்கள்.அந்த சோகத்தின் நீட்டிப்பாய் தொடர்கின்றன பின் வரும் நாட்கள்.தினமும் பணத்தை முன்வைத்து தாய் தந்தைக்கு இடையே நடக்கும் சண்டைகள்,பிள்ளைகளால் தவிர்க்க படும் பொன்னையனின் தாத்தா - பாட்டி,தீய பழக்கங்களுக்கு ஆளாகும் அண்ணன்,சுயநலம் மிகுந்து அறுபடும் உறவுகள் என தன்னை சுற்றி நடப்பவைகளை மௌனியாக கவனிக்கும் பொன்னையனின் பார்வையில் கதை நகர்கின்றது.



1980 களில் கதை நிகழ்வதாய் உள்ளது.அந்த கால கட்ட அரசியல்,சினிமா குறித்த கிராமத்து மக்களின் ரசனை/ பார்வை,திருவிழா நேர கலாட்டாக்கள்,கிராமத்தில் இருந்து புதிதாய் கல்லூரிக்கு செல்லும் மாணவனின் அனுபவங்கள் என கதோயோட்டதொடு சேராமல் துண்டு துண்டாய் பல காட்சிகள் வர்ணனை செழிப்போடு வருகின்றது.இருப்பினும் அக்காலகட்ட விவரிப்புகள் சுவாரஸ்யம் கூட்டுபவையே.

இந்நாவலின் மனிதர்களை சுலபமாய் இருவகையாய் பிரிக்கலாம்.வாழ்வும்,சூழலும் மாறினாலும் மண்ணின் மீதும்,சக உறவுகள் மீதும் கொண்டிருக்கும் பிரியம் குறையாது இருப்பவர்கள்.பொன்னையன்,பொன்னையனின் அப்பா,தாத்தா,பாட்டி இவ்வகையினர்.சூழ்நிலைகேற்ப தம்மை வளைத்து கொண்டு பணத்தை பிரதானமாய் கொண்டு அந்தந்த நேர பொழுதை கழித்தால் போதும் என்னும் மனநிலை கொண்ட பொன்னையனின் தாய்,அக்கா,தி.மு.க வின் மொண்டி ராமு ஆகியோர்.இரு வகையினருக்கும் பொதுவாய் அமைந்து இருப்பது ஜாதிதிமிர் மட்டுமே.

நாவல் குறித்த தம்முடைய உரையில் எழுத்தாளர் விக்ரமாதித்யன் தமிழின் இதுவரை வெளிவந்துள்ள சிறந்த நாவல்களான "புயலிலே ஒரு தோணி","நித்ய கன்னி","நாளை மற்றும் ஒரு நாளே" ,"ஒரு புளிய மரத்தின் கதை" வரிசையில் இந்நாவலும் சேர்த்தி என குறிப்பிட்டுள்ளார்.அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

நூல் வெளியீடு - மருதா பதிப்பகம்

20 comments:

narsim said...

//அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை//

மிகச்சரியான வரிகள்

லேகா said...

நன்றி நர்சிம்

குப்பன்.யாஹூ said...

நான் முதன் முதலாய் கேள்வி படுகிறேன் இந்த நூல் ஆசிரியர் பற்றி.

மிக்க நன்றி, புத்தகம் அறிமுகம் செய்தமைக்கு. கூடிய விரைவில் வாங்கி படிக்கிறேன்

குப்பன்_யாஹூ

லேகா said...

நன்றி குப்பன்_யாகூ.

நான் படித்த முதல் பெருமாள் முருகனின் நாவலும் இதுவே!! இவரின் மற்றொரு நாவலான "கூளமாதாரி" சிறந்த நூல் பட்டியலில் உண்டு என அறிந்தேன்!

Krishnan said...

I have never tried anything by Perumal Murugan. Thanks Lekha for introducing his work.

லேகா said...

Tnx Krishnan!!

Raj said...

லேகா...நான் "பெருமாள் முருகனின்", கூள மாதாரி படித்திருக்கிறேன். மருதா பதிப்பகத்தின் முகவரி அல்லது இந்த புத்தகம் சென்னையில் எங்கே கிடைக்கும் என்ற தகவல் தர முடியுமா?

லேகா said...

பின்னூட்டத்திற்கு நன்றி ராஜ்.

மருதா பதிப்பகத்தின் முகவரி பார்த்து கூறுகிறேன்.

புத்தகம் சென்னையில் வாங்கவில்லை,நீண்ட நாட்களுக்கு முன்னர் அப்பாவினால் வாங்கப்பட்டது.

Krishnan said...

"நாவல் குறித்த தம்முடைய உரையில் எழுத்தாளர் விக்ரமாதித்யன்" - is it a book or an essay ? Which other books are in his list ?

Krishnan said...

Got this from googling:

மருதா பதிப்பகம் வெளியீடு 102 பாரதிசாலை சென்னை 14 marutha1999@rediffmail.com

லேகா said...

இந்நாவல் குறித்த தனது முன்னுரையில் எழுத்தாளர் விக்ரமாதித்யன் தமிழில் இதுவரை வெளிவந்துள்ள மிக சிறந்த நூல்களை குறிப்பிட்டு இருந்தார்.முழுபட்டியலை நாளை சொல்கிறேன்.

"நித்ய கன்னி","புயலிலே ஒரு தோணி","நாளை மற்றும் ஒரு நாளே" ஆகியவை மட்டுமே தற்பொழுது நினைவில் உள்ளது.

மருதா பதிப்பகத்தின் முகவரி பகிர்ந்தமைக்கு நன்றி.

லேகா said...

@ குப்பன்_யாகூ & கிருஷ்ணன் & ராஜ்

மருதா வெளியீடான "ஏறுவெயில்" நாவல் சென்னை தி.நகரில் உள்ள Any Indian புத்தக கடையில் கிடைகின்றது.

கடையின் முகவரி பின்வருமாறு:

AnyIndian.com Book Shop
# 102, No. 57, PMG Complex
South Usman Road
T. Nagar, Chennai - 17

Phone: 24329283

AnyIndian புத்தகக் கடை தி.நகர் பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ளது. ரத்னா பவனுக்கும், கிருஷ்ணவேணி தியேட்டருக்கும் எதிரில் அமைந்துள்ளது.

இந்நாவல் மட்டும் இன்றி தமிழின் சிறந்த பல நாவல்கள் இங்குள்ளது!!

லேகா said...

விக்ரமாதித்யன் குறிப்பிட்டிருந்த தமிழின் சிறந்த நாவல்கள் :

நாளை மற்றும் ஒரு நாளே
புயலிலே ஒரு தோணி
நித்ய கன்னி
புத்தம் வீடு
அறுவடை
ஒரு புளிய மரத்தின் கதை
நினைவுப்பாதை

Krishnan said...

Thanks Lekha.

Unknown said...

உங்கள் வலைக்கு முதல் முதலாக வருகிறேன். முதல் ஆச்சரியம் அசட்டு காதல் கவிதைகள்/கதைகள் இல்லை.உங்கள் வாசிப்பு மேன்மை தரம் மேலானது.


எல்லாவற்றையும் ஒரு மூச்சில் படித்துவிட்டேன். ஏன் கவிதை/கதை/கட்டுரை எழுதலாமே? படித்ததில் மூன்று விஷயம். மட்டும்.


அவள் அப்படித்தான்

அருமையான படம். ஸ்ரீப்ரியா (இப்ப இந்த காயன போட போறேன் வெடுக்குதன்ம்) மஞ்சுவாக வாழ்ந்திருப்பார்.பாசாங்கு இல்லாத படம் .முதல் நாளே பார்த்தேன்

(தீபாவளி 1978 ) ஆ.வீ .மார்க் 30/100 .தங்க ரங்கன் படம் இதைவிட அதிகம் .மார்க். ஒரு காட்சியில் மஞ்சு( என்ன நடிப்பு) ரொம்ப சண்டை போட்டு உணர்ச்சிவசப்பட்டு கமல் அவரை சமாதனப்படுத்தி படுக்க வைப்பார்.

ஜன்னல் திரையை திறந்து விடுவார். இசை ஞானி பின்னுவார்

தனுமை: மறக்கமுடியாத சிறு கதை.((தனுவின் தம்பி "தேங்க்ஸ்" என்று சொன்னான் . தாணு "ஊஸ்" என்று அவனை அடக்கி )

இவர் எழுத்தை சற்று உற்று பார்த்தல் தி.ஜா தெரியும் .

இசை ஞானி: முக்கால் வாசி வலைகளில் ( பெண்கள்/ஆண்கள்) ப்ரோபிளில் பார்க்கலாம் .அதற்கு இரண்டு விஷயம் 1.Romanticization 2.soul stirring.

இந்த இரண்டும் சில பரந்த வாசிப்பு உள்ளவரிடம் உள்ளது.

சரியா சொல்லுங்கள்

என் வலைக்கு வாருங்கள்.கருத்து சொல்லுங்கள்.
சாத்தலாம் / வாழ்த்தலாம் raviaditya.blogspot.com

குப்பன்.யாஹூ said...

நன்றி லேகா,.

தி நகரில் மற்றும் ஒரு சிறந்த புத்தக கடை உள்ளது.

RMKV எதிர் புறம் வரும், மேம்பாலம் முடிந்து திரும்ப வேண்டும்.

New Book Land
#52 North Usman Road
T. Nagar
Chennai-600017
Landmark: Opp A.R.R. Complex,Near Panagal Park
Phone: 044-28156006


ஆனால் இங்கு வண்ண நிலவனின் கடல் புறத்தில் மட்டுமே உள்ளது, அவரின் கம்பா நதி, தாமிரபரணி கதைகள் புத்தகம் இல்லை.

WE CAN GET ALL OTHER BOOKS OF JEYAKANTHAN, JANAKIRAMNA, SUBAVEE, KALYAANJI...


குப்பன்_யாஹூ

பிறை said...

ஆரவாரமில்லாத உங்கள் பதிவுகள் பிடித்திருக்கின்றன.

லேகா said...

@

//RMKV எதிர் புறம் வரும், மேம்பாலம் முடிந்து திரும்ப வேண்டும்.

New Book Land
#52 North Usman Road
T. Nagar
Chennai-600017
Landmark: Opp A.R.R. Complex,Near Panagal Park
Phone: 044-28156006//

குப்பன்_யாஹூ
மிக்க நன்றி குப்பன்..நீண்ட தேடிகொண்டிருக்கும் புத்தக கடை இது..:-))

//அவரின் கம்பா நதி, தாமிரபரணி கதைகள் புத்தகம் இல்லை.//

இந்நூல்கள் தற்பொழுது எங்கும் கிடைப்பதாய் தெரியவில்லை.என்னிடம் உள்ளது 1980 களில் வாங்கியது!

லேகா said...

@ரவிசங்கர்

உங்களின் நீண்ட பின்னூடலுக்கு நன்றி.

//முதல் ஆச்சரியம் அசட்டு காதல் கவிதைகள்/கதைகள் இல்லை//
:-))

தனுமை - படிக்கும் பொழுதே மழை சாரல் முகத்தில் பட்டு சிதறும் அனுபவம் தருவது. தனுவின் நினைவோடு தனித்திருக்கும் நாயகனின் வெறுமையை "தனியாகி..தனுவாகி...." என வர்ணித்திருக்கும் வரிகள் எனக்கு மிகபிடித்தமானது.

லேகா said...

நன்றி பிறை