தீவிரமான வாசிபிற்கு பிறகு வேகத்தடை வேண்டுமென நினைத்தால் சட்டென என் நினைவிற்கு வருவது சுஜாதாவின் படைப்புகள்!!தீவிரமான மனவோட்டம் தேவை இன்றி அதன் கதை செல்லும் போக்கில் உடன் சென்று படித்து ரசிக்கலாம்.
இம்முறை "புயலிலே ஒரு தோணி" மற்றும் "கடலுக்கு அப்பால்" என்கிற இரு பெரும் நாவல்களை படித்த பிறகு சுஜாதாவின் கணேஷ்-வசந்த் படிக்க வேண்டும் என தோன்றியது.சட்டென நினைவிற்கு வந்த நாவல் "எதையும் ஒருமுறை".
கணேஷ் - வசந்த் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது "எதையும் ஒரு முறை".மற்றும் ஒரு சுஜாதாவின் கணேஷ் - வசந்த நாவல் என எளிதாய் ஒதுக்கி விடலாம் இதனை,இருப்பினும் சுஜாதா எடுத்துக்கொண்ட கதைக்கரு சற்று சிந்திக்க வைக்க கூடியது.பணம் படைத்தவர்களின் உலகமாய் தற்போதைய சமூக நிலை மாறி வருவதும்,விளிம்புநிலை மக்கள் அதற்கு இரையாவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருவதை ஒரு கொலையின் மூலமாய் எடுத்துரைக்கின்றது இந்நாவல்.
கூவம் நதிக்கரையோரம் ஒதுங்கிய பெண் பிணம் ஒன்றை தாங்கள் போகும் வழியில் காணும் கணேஷ் - வசந்த உடன் இருக்கும் சட்டகல்லூரி மாணவி ஒருத்தியின் நச்சரிப்பால் அம்மரணத்தை குறித்து துப்பறிய ஒத்துகொள்கின்றனர்.ஆர்வமும்,ஈடுபாடும் இல்லாமல் தொடங்கும் அவர்களின் தேடல் கொஞ்சம் கொஞ்சமாய் விறுவிறுப்பு அடைவது அப்பெண்ணின் வீட்டை கண்டுபிடித்து அதனுள் இருந்த "பறவைகள் உலகம்" என்னும் புத்தகத்தை கண்டெடுக்கும் பொழுது தான்.
இறந்த அப்பெண் விளிம்பு நிலை வேசி,படிப்பறிவு இல்லாதவள் என கணக்கிட்டு அந்நூலின் உரிமையாளரை தேடி இவர்கள் பயணம் தொடர்கிறது!!அவர்கள் கண்டு பிடிக்கும் ஆள் பெரும் பணக்காரனாய்,விசித்திர பழக்கங்கள் கொண்டவனாய் தெரிகிறான்.எதையும் ஒருமுறை முயன்று பார்க்க வேண்டும் என்னும் அவனின் ஆர்வத்தை கொண்டு அவனே கொலையாளி என அறிந்திருந்தும் தண்டனை வாங்கி தர இயலாது திரும்புகின்றனர்.
இந்நாவலின் கிளைமாக்ஸ் வாசிப்பவர் போக்கிற்கு விடப்படுகின்றது.இது போல நிஜ நிகழ்வுகள் இருந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை என்னும் படியாக தற்போதைய
சூழல் உள்ளது!!முடிவை குறித்த ஆர்வம் மேலிட விறுவிறுப்பாய் செல்லும் இந்நாவல் கணேஷ் - வசந்த் நாவல்களில் குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
இந்தக்கதையின் உச்சகட்டமே அதன் முடிவுதானே.. அதை விட்டு விட்டீர்களே. தண்டனை வாங்கிக்கொடுக்க முடியாத சோகத்தில் வசந்த் புலம்ப, கணேஷ் சொல்லும் அந்த லாஜிக் ஒரு பைனல் டச் இல்லியா...
// இந்நாவலின் கிளைமாக்ஸ் வாசிப்பவர் போக்கிற்கு விடப்படுகின்றது.இது போல நிஜ நிகழ்வுகள் இருந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை என்னும் படியாக தற்போதைய
சூழல் உள்ளது!//
அவரது விஞ்ஞானச் சிறுகதை தொகுப்பில் இரண்டுகதை மற்றும் கொலையுதிர் காலம் இந்நாவலிலும் அப்படித்தான் முடிவு வாசிப்பபரின் போக்கிற்கே விடப்படும்.செம கடுப்பாயிடும்.கணேஷ் வசந்த் இருவல் வசந்த் பாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
//இந்தக்கதையின் உச்சகட்டமே அதன் முடிவுதானே.. அதை விட்டு விட்டீர்களே. //
முடிவ சொல்ல கூடாதுன்னு கார்த்திச்க் சொல்லி இருக்காரு கிருத்திகா அதான் :-)
கணேஷ் கூறும் அந்த லாஜிக் கசப்பான உண்மையே!!
//கணேஷ் வசந்த் இருவல் வசந்த் பாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும்//
யாவருக்கும் பிடித்த கதாபாத்திரமே கார்த்திக்.எதையும் ஒரு முறை போல எனக்கு பிடித்த மற்றொரு நாவல் 'இதன் பெயரும் கொலை"
Hi,so far i have read few ganesh vasanth stories... I came to know about this novel now only ...I will try this also...Thanks for this information.
Tnx Raj :-)
came to your blog from the sujatha community in orkut.
naan rasikira sujatha ezhuthugala rasikiravangala paakumbothu romba sandhoshama irukku.
edhayum oru murai novel la andha panakaara aaloda logic enna rombave eerthathu.
Hi..
Happen to come across your blog from orkut community...
Excellent blogging..
Now am lookin fwd to read sujatha s "yethayum oru murai"..after readin your blog..
Keep going...
Hi,Please post some new topics on sujatha's novel
please some more sujatha sir books i will be happy madam
Post a Comment