Friday, August 15, 2008
புயலிலே ஒரு தோணி...கடல் கடந்த தமிழர்களின் பயணம்!!
இலக்கிய நண்பர்கள் யாவரும் என்னிடம் கேட்கும் கேள்வி புயலிலே ஒரு தோணி படித்து இருக்கீங்களா என்பது தான்.அந்நூல் குறித்து நூல் ஆசிரியர் குறித்தும் கேள்விப்பட்டதில்லை முன்பு!!சாருவிடம் பேசிய பொழுது தனக்கு மிக விருப்பமான எழுத்தாளர் ப.சிங்காரம் எனவும் அவரின் புயலிலே ஒரு தோணி நாவல் கட்டாயம் படிக்க படவேண்டிய நாவல் என்ன அழுத்தமாக கூறினார்.நாவல் படித்தாகிவிட்டது!வலி மிகுந்த கடல் கடந்த தமிழர்களின் பயணம்,நடக்கும் காலம் சுதந்திரம் பெறுவதற்கு முன்.அது குறித்து இனி.............
ப.சிங்காரம் அவர்களின் பேட்டி என்பதை விட தமிழ் இலக்கியம் குறித்தும் அவரின் படைப்புகள் குறித்துமான அலட்டல் இல்லாத மிக இயல்பான சந்திப்போடு நாவல் தொடங்குகிறது.தமிழின் தற்கால படைப்புகள் குறித்து அறிந்திராத, இலக்கிய சூழலில் இருந்து முற்றிலும் விலகிய அவரின் தனிமை குறித்து கேட்கப்படும் கேள்விக்கு "எல்லாரும் ஒரு வகையில் தனிமையில் தான் இருக்கோம்" என சொல்லி அடுத்த கேள்விக்கு தயாராகிறார்..வாழ்ந்த காலத்தில் பெரிதும் அறியப்படாத பா.சிங்காரம் மதுரை நகரில் தனது பெரும் பகுதி வாழ்வை கழித்து 1997 இல் மரணம் அடைந்துள்ளார்.
புயலிலே ஒரு தோணி
பர்மாவிலும்,இந்தோனேஷியாவிலும்,மலேயாவிலும்,சுமத்திரா தீவுகளிலும் வாழ்ந்த தமிழர்களின் சுதந்திரத்திற்கு முன்பான நிலையை உலக யுத்த போராட்டங்களோடு கற்பனை கலந்து சொல்லப்பட்ட சுவாரசியமான தகவல் களஞ்சியம்!! சுபாஷ்சந்திர போசின் ஐ.என்.ஏ படையில் பங்கு கொண்டு தீவிர போராட்டத்தில் பங்கு பெரும் நாயகன் பாண்டியனை சுற்றியே கதைக்களம் சுழல்கிறது!! வேற்று நாட்டில் பிழைக்க சென்ற மக்களின் நினைவுகள் யாவும் தாம் பிறந்த,வளர்ந்த நகரங்களையும்,அதன் மனிதர்களையும் எப்பொழுதும் சுற்றி வருவதை அவர் அவர் நினைவோடையின் வழி அறிய செய்திருப்பது அருமை!!பினாங் நோக்கிய நீண்டதொரு கடல் பயணத்தில் ஒவ்வொரு பயணியும் தான் தாய் மண்ணில் கழித்த கடந்த கால நினைவுகளை விவரிக்கும் இடம் இதற்கோர் சிறந்த உதாரணம்.
சொந்த மண்ணில் வாழ்பவர்களை காட்டிலும் அகதிகளுக்கே தாய் மண்ணின் மீதான ஏக்கமும் பிரியமும் அதிகமாய் சுரக்கும் என்பதில் ஐயமில்லை.மலேயா நாட்டின் பினாங்கு (செட்டி) தெரு மக்கள் மதுரை மற்றும் மதுரை சுற்றியுள்ள தத்தம் ஊர்களுக்கு செல்லும் நாளை குறித்த பேச்சை எப்பொழுதும் விவாதத்திற்கு எடுத்து கொள்வது இயல்பானதே.ஐ.என்.ஏ((இந்தியன் நேஷனல் ஆர்மி)படையில் பாண்டியனும் அவனது நண்பர்களும் பங்கு கொண்டு சீன மட்டும் சப்பான் எதிரிகளை சாதுர்யமாய் வீழ்த்தும் காட்சிகள் கற்பனை மிகாமல் எளிமையாய் விளக்கபட்டுள்ளது சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களை பெருமிதத்தோடு பார்க்க செய்வதோடு எளிதாய் கிடைத்ததில்லை இந்த வசதி வாய்புகள் என்பதையும் உணர செய்கின்றது.
எதிர்காலம் குறித்த பெரு வேட்கை கொண்ட இளைஞர்களாய் பாண்டியனும் அவனது நண்பர்களும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்குள்ளான விவாதங்கள் தீவிரமானைவை,தொலைநோக்கு பார்வை கொண்டவை..ஜாதி அமைப்புகள் தோன்றிய காரணங்களை விவரிக்கும் இடமும்,கலப்பு திருமணம் குறித்த நீண்ட தொரு விவாதமும் நாமே அதில் பங்கு கொள்ள ஆவலை தூண்டும் இடங்கள்!!மிகப்பெரும் கருத்துக்களை ஆசிரியர் போகிற போக்கில் சொல்லி செல்வது வியப்பை தருகின்றது.
உலக யுத்தம் குறித்த இவ்வளவு விரிவாய் தமிழில் எந்த ஒரு நாவலும் வந்ததில்லை என்று முன்னுரையில் கூறப்பட்டுள்ளது மிக சரியே.சுதந்திரம் போராட்டம் என்றதும் நமக்கு நினைவிற்கு பாரதியின் பாடல்களும்,காந்தியும் நேருவுமே,அதை தாண்டி கடல் கடந்து சென்று தமிழர்கள் பங்கு கொண்டு புரட்சி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வரலாற்றை விளக்கும் இந்நாவல் யுத்த காலத்தின் பல்வேறு கோர முகங்களை படம்பிடித்து காட்டுகின்றது.ஹிட்லர் முசோலினியின் மரணங்கள்,பேள் ஹார்பர் யுத்தம் ஆகியவை சமகால நிகழ்வுகளாய் சொல்லபடுகின்றன.நாவலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொன்று சங்க தமிழ் பாடல்களின் மேற்கோள்,சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை குறித்த சம்பாஷனைகள்...நாவலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொன்று சங்க தமிழ் பாடல்களின் மேற்கோள்,சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை குறித்த சம்பாஷனைகள்...மீண்டும் மீண்டும் விவரிக்கபடும் அழகிய மதுரை !!
முற்றிலும் புதிய வாசிப்பு அனுபவம்.கதை சொல்லும் பாங்கு,அதன் மாந்தர்கள், அவர்களுக்குள்ளான ஆரோக்கியமான விவாதங்கள்,ஐ.என்.ஏ போராட்ட வியூகங்கள், சங்க தமிழ் மேற்கோள்கள்,இந்தோனேஷியா & மலேயா தெருக்கள்,ஆங்காங்கே இழையோடும் ஹாஸியம், .........என நாவலின் கதைக்களமும் மாந்தர்களும் மிகுந்த நெருக்கதிற்குறியதாய் மாறி நினைவை விட்டு நீங்க மறுக்கிறது!! சிறந்த வாசிப்பு அனுபவத்தோடு அறிந்திராத சுவாரசியமான அனுபவ பயணத்தை படித்த பெரும் திருப்தியை தரவல்லது இந்நாவல்.
நூல் வெளியீடு - தமிழினி பதிப்பகம்
விலை : 180 ரூபாய்.
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
The owner of this blog has a strong personality because it reflects to the blog that he/she made.
நல்ல விமர்சனம். நானும் இந்த புத்தகத்தை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கீறேன்.... சமீபத்தில் கூட, நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் இந்த புத்தகத்தில் இருந்த ஒரு பகுதியை மேற்கோள் காட்டி பேசினார். இன்னும் படிக்கவில்லை. ஆனால் கண்டிப்பாக படிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
பின்னூடலுக்கு நன்றி ராஜா.
வித்தியாச வாசிப்பு அனுபவத்தை தரவல்லது இந்நாவல்!!
நல்ல பதிவு லேகா
தொடருங்கள்.
மிக நேர்த்தியாக உள்ளது உங்களின் விமர்சனங்கள்! வாசிக்கும் ஆவலை தூண்டுகிறது. வாழ்த்துக்கள்
Tnx Sathish :-)
Tnx Sathish :-)
நல்ல அறிமுகம். படித்த பின் எனது கண்ணோட்டத்தையும் பதிப்பிக்கிறேன்.
i am searching this book for long time.please,let me know where can i buy a copy of this book.i can buy through internet.
i am searching this book for long time.please,let me know where can i buy a copy of this book.i can buy through internet.
Post a Comment