Thursday, August 14, 2008

வண்ணதாசன் சிறுகதைகள் …நிதர்சன புனைவுகள்!!

கல்யாணசுந்தரம் , கதை உலகில் வண்ணதாசன் எனவும் கவிதை உலகில் கல்யாண்ஜி எனவும் அறியப்படும் எழுத்தாளர்.வண்ணதாசனின் கதைகள் யாவும் நம்மை வேறு தளத்திற்கு எடுத்து செல்லும் பலம் கொண்டது.வண்ணதாசன் கதைகள் அமைதியானவை,அழகானவை,ஆளமானவை!! மனித உறவுகளின் பல்வேறு நிகழ்வுகளை இயல்பாய் எடுத்துரைப்பவை..வண்ணதாசனின் சிறுகதைகள் அனைத்தும் சேர்த்து முழு தொகுப்பை வெளிவந்துள்ளது.திரும்ப திரும்ப படித்தாலும் சலிக்காத அவரின் எழுத்துக்கள் நிஜ உலகின் நிதர்சன புனைவுகள்.. மிக சமீபத்தில் விகடனில் வெளிவந்த அவரின் அகமும் புறமும் யாவரும் படித்து மகிழ்ந்த பெரும் வரவேற்ப்பை பெற்ற தொடர்!!





கடைசியாய் தெரிந்தவர்கள்

வண்ணதாசன் சிறுகதைகளில் என்னை கவர்ந்த பலவற்றுள் முக்கியமானது இச்சிறுகதை.மருத்துவமனையில் இருக்கும் தன் தோழனின் குழந்தையை கவனித்து கொள்ளும் நாயகனின் மன ஓட்டமே இந்த கதை..நண்பர் மற்றும் அவர் தம் துணைவியாருடன் சேர்ந்து தாமும் அவர்கள் மனநிலையை பகிர்ந்து கொள்ளும் நாயகன் அக்குழந்தை இருக்கும் பக்கத்து அறையில் ஒரு நோயாளியை சந்திக்கிறான்.வேறு ஒரு நண்பன் என்ன நாயகனை புரிந்து கொள்ளும் அவன் நலம் விசாரிக்க அவன் மனம் கோனா வண்ணம் நாயகன் அவனிடம் தானே அந்த நண்பன் என கூறி விடை பெறுகிறான்.மருத்துவமனைகள் எப்போதும் ஒரு சோகம் கவ்வி கிடக்கும் ..மனம் பாரமாய் உணரும் இடம்….அதற்கென்று தனி வாசனை உண்டு..எப்போது வெளிவருவோம் என்று வெறுமை கொள்ள செய்யும் இடம்..மனித உணர்வுகள் பிரியத்தை வெளிப்படுத்தும் விதத்தை அத்தகைய இடத்தில் நடைபெறுவதாய் அழகாய் அமைத்துள்ளார் வண்ணதாசன் ..

நிலை:



வீட்டு வேலை செய்து பிழைக்கும் கோமு என்ற சிறுமியை சுற்றி செல்லும் கதை..திருவிழா தேர் பார்க்க வீட்டில் அனைவரும் சென்று விட தேர் குறித்த நினைவுகளுடனும்,ஆசைகளுடனும் இருக்கும் கோமுவின் மனத்திரையை நம் கண்முன் நிறுத்துகிறார் வண்ணதாசன்..சிறு வயதில் பள்ளி செல்ல இயலாது,தன் வயதி ஒத்த சிறுவர்களுடன் விளையாட முடியாது வீட்டு வேலை செய்து பிழைக்கும் எண்ணற்ற குலைந்தைக்ல் நம் சமூகத்தில் உண்டு.வருமையிம் கோர முகத்தின் ஒரு வெளிப்பாடு அது.கோமுவும் அதுபோலவே…. சிறுவர்கள் குறித்து எழுத பட்ட கதைகளில் கீ.ராவின் கதவு,ஜெ.கே யின் உன்னைப்போல் ஒருவன் வரிசையில் இந்த கதையும் சேரும்

தனுமை

வண்ணதாசன் சிறுகதைகளில் பெரும் வரவேற்பை பெற்றது தனுமை.அழகிய காதல் கதை.நாயகன் நாயகியோடு பேசாமலே.. பார்வையால்,எண்ணகளால்,உணர்வால் பிரியம் கொள்வதை அமைந்துள்ளது.மழை பெய்து ஓய்ந்த ஒரு நாளில் நாயகி தாணு சாலையில் நடத்து வருவதாய் வண்ணதாசன் அமைத்துள்ள காட்சி அழகிய கவிதை. நாயகன் தனுவின் நினைவாக தனிமையில் அமர்த்து இருக்கும் ஒரு காட்சியை"தனியாகி…தனுவாகி.." என வர்ணிக்கும் பொழுது கல்யாண்ஜி வெளிபடுகிறார்.கதைக்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் பின்பாதி கதை மழையோடு பயணிக்கிறது.எழுத்தாளர் பாவண்ணன் பல்வேறு எழுத்தாளர்களில் சிறந்த கதைகளை தொகுத்து நூலாக வெளியிட்டார்..அதில் வண்ணதாசன் சிறுகதைகளில் அவர் தேர்ந்து எடுத்தது தனுமை..

வெள்ளம்



மழையும்,நதியும்,கடலும்.. அழகானவையே..நமக்கு தீங்கு விளைவிக்காதவரை.ஒரு பெரு மழைகாலத்தில்,வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நாளில் நிகழும் இந்த கதை புனையபட்டதல்ல.வண்ணதாசன் தம் அனுபவங்களையே கதையாய் தருவார் பெரும்பாலும்.வெள்ளம் அதுபோலவே..மதுரையில் அவர் வங்கி பணியில் இருந்த போது எழுத பட்டது இக்கதை.தம் மகளுடன் வைகை நதியை கடந்து செல்லும் அவர் பணி செல்லும் அவசரத்தில் அந்த நதியின் அழகை ரசிக்க முடியாததை..கூறும் விதம்,நாம் அனைவரும் மேற்கொண்டுள்ள இயந்திர வாழ்வின் அவலத்தை கூறுபவை.பணி முடிந்து வந்து தம் மனைவியை அழைத்து வந்து வெள்ளத்தை காட்ட எண்ணி கொண்டி செல்வார்..அங்கு வேலை முடிந்து இரவு வீடு மழையும்,நதியும்,கடலும்.. அழகானவையே..நமக்கு தீங்கு விளைவிக்காதவரை.ஒரு பெரு மழைகாலத்தில்,வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நாளில் நிகழும் இந்த கதை புனையபட்டதல்ல.வண்ணதாசன் தம் அனுபவங்களையே கதையாய் தருவார் பெரும்பாலும்.வெள்ளம் அதுபோலவே..மதுரையில் அவர் வங்கி பணியில் இருந்த போது எழுத பட்டது இக்கதை.தம் மகளுடன் வைகை நதியை கடந்து செல்லும் அவர் பணி செல்லும் அவசரத்தில் அந்த நதியின் அழகை ரசிக்க முடியாததை..கூறும் விதம்,நாம் அனைவரும் மேற்கொண்டுள்ள இயந்திர வாழ்வின் அவலத்தை கூறுபவை.பணி முடிந்து வந்து தம் மனைவியை அழைத்து வந்து வெள்ளைத்தை காட்ட எண்ணி கொண்டு செல்வார்..அங்கு வேலை முடிந்து இரவு வீடு வரும் பொழுது,மழையால் வீடு இழந்தவர்களை அவர் மனைவி வீட்டில் அமர வைத்து பேசி,ஆறுதல் கூறி கொண்டிருப்பார்…ஒரே நிகழ்ச்சி சிலருக்கு மகிழ்ச்சியையும்,சிலருக்கு துன்பத்தையும் அளிக்கும் விதத்தை அழகாய் கூறி இருப்பார்..இப்பொழுதும் எனக்கு வைகையை கடக்கும் ஒவ்வொரு பொழுதும் ..வண்ணதாசனின் வெள்ளம் மன ஓட்டத்தில் வந்து மறையும்.


யாளிகள்



வண்ணதாசனின் இந்த சிறுகதை..தனிமையில் உழலும் முதியவர்களை பற்றியது.தான் முதியோர் இல்லத்தில் சந்தித்த ஒருவரை கதை நாயகனாகி இக்கதை எழுதி உள்ளார்.இளமை காலங்களில் உழைத்து களைத்து,முதுமையில் ஓய்வு மற்றுமே பெறவேண்டிய முதியோர்கள் பலர் இன்று பிள்ளைகளால், சொந்தங்களால் ஒதுக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் உள்ளனர்..அப்படி அமைந்த ஒருவருடன் தன் பெற்ற அனுபவத்தை அழகாய் கூறியுள்ளார் அவருக்கே உரிய மென்மையான பாணியில்

இளமையில் கொடுமை வறுமை..
முதுமையில் கொடுமை தனிமை..


ஆறு





தாமிரபரணி நதியை குறிப்பிடும் இந்த கதையின் தலைப்பு.வாழ்ந்து கெட்ட குடும்பத்தை சேர்ந்த குஞ்சம்மா என்கிற இளம் பெண்ணின் ஒரு நாளின் எண்ணங்கள்,காரியங்களை சுற்றி புனைய பட்ட கதை இது.வாழ்வின் தேடல் தவிர்க்க முடியாதது.,வாசிப்பு குறித்து,இயற்கை குறித்து,உணவு குறித்து,,முகம் அறியா மனிதர்கள் குறித்து,பணம் குறித்து,நிரந்தர பணி குறித்து,உடை குறித்து..என தேடல் எல்லாவற்றிலும் இன்றியமையாது இருக்கும்.குஞ்சமாவின் தேடல் வாழ்கை சிறப்பாய் அமைக்க நிரந்தர பணி பெறுவது குறித்தது..ஏழை பெண்ணின் எண்ணங்களை அழகாய் வண்ணதாசன் கூறியுள்ளார்.கதையின் கடைசி வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை…தனக்கு நல்ல வேலை கிடைத்து விடும் என்று எண்ணி கொண்டே குஞ்சம்மா தாமிரபரணி நதியை நோக்கி பார்க்க..

அதோ பாலம் தெரிகிறது…
பாலம் தெரிந்தால் ஆறு தெரிந்தது போல தான்…

என அவள் ஆசைகள் விரைவில் நிறைவேறும் என்ன சொல்லாமல் சொல்லி முடிக்கிறார்..


மிச்சம்


வாழ்வின் மென்மையான/அழுக்கற்ற பக்கங்கள் குறித்தே எழுதும் வண்ணதாசன் இந்த சிறுகதையில் விலைமாது ஒருத்தியின் ஒரு அதிகாலை பொழுதை விவரித்து உள்ளார்.பொதுவாக எந்த கதை படிக்க தொடங்கினாலும் அந்த கதை நிகழும் இடம்,கதை மாந்தர்கள் குறித்து கற்பனை செய்து கொள்வேன்..இக்கதை நிகழும் இடம் குறித்து வண்ணதாசன் தெளிவாய் சொல்லாவிடினும் எனக்கு மதுரை டவுன் ஹால் ரோடு பகுதியே நினைவில் வந்தது..எல்லோரையும் போல காலை அழகாய் ரசிக்கும் மனம் இன்றி அந்த நாளை எதிர்நோக்கும் ஒரு வெறுப்புடன் தான் முன்னிரவு இருந்த விடுதியை விட்டு வெளி வருகிறாள்.அங்கு தெருக்களை கூட்டி பெருக்கும் தன் தோழியை கண்டு வயதான காலத்தில் தன் நிலைமையும் அதே தான் என எண்ணி வருந்துகிறாள்..தோழியின் மகனான சிட்டி இவளுக்கு காபி வாங்கி வரும் வேளையில் அங்கு இருக்கும் குளிர்பான கடையில் மீதம் இருக்கும் எச்சில் பானத்தை குடிக்க அதை காண சகியாமல் அவனை அடிக்கிறாள்..( கதையில் எனக்கு மிகவும் பிடித்த இடம்) தன் வாழ்வை போன்றதொரு எச்சில் பணி அவனையும் வந்து சேரும் என்கிற ஆத்திரம் தாளாமல் அவள் அச்சிறுவனை அடிக்கும் அந்த காட்சி உணர்வுபூர்வமானது .மெல்ல சூரியன் வெளி வர நகரத்தின் அன்றாட பணி தொடங்குகிறது..ஏனோ அவளுள் இருள் சூழுவதாய் கதையை முடிகிறது….

13 comments:

Anonymous said...

It could challenge the ideas of the people who visit your blog.

KARTHIK said...

நல்ல விமர்சனம்
நீங்க எடுத்த வைகை ஆத்தோட படத்தையும் இதுலையே இனச்சுட்டிங்க.
இந்தப்பதிவ படிச்சதையுமே வாங்கத்தூண்டும் புத்தகம்.

லேகா said...

தமிழில் மிகசிறந்த சிறுகதைகளை பட்டியலிட்டால் வண்ணதாசன் மற்றும் வண்ணநிலவனின் சிறுகதைகள் நிச்சயமாய் இடம்பெற்றிருக்கும்...அவர் கதைகளில் இடம்பெறும் வாதாம்,புன்னை மரங்களும்,நதியும்,அருவியும், மழை நனைத்த சாலையும், கோவில் வீதிகளும் எனக்கு மிகுந்த நெருக்கதிற்குரியவை...

வைகை பற்றிய கதையில் நான் எடுத்த வைகை வெள்ள புகைப்படத்தை போடாமல் இருப்பேனா?? :-)

KARTHIK said...

//வைகை பற்றிய கதையில் நான் எடுத்த வைகை வெள்ள புகைப்படத்தை போடாமல் இருப்பேனா?? :-)//

நல்லாருக்கு.

நீங்க எடுத்த பழைய படங்கள் இருந்த கூட இந்த மாச போட்டிக்கு அனுப்பி வைங்க லேகா.

லேகா said...

கார்த்திக் இந்த ஒரு புகைப்படத்த வச்சு என்ன தப்பா நினைச்சுடிங்க!ஹா ஹா !!

கவித்துவமான படங்கள் எடுக்க விரும்பி தான் அதிக விலை குடுத்து டிஜிட்டல் காமரா வாங்கினேன்..ம்ம்ம்ம்...........இங்க இருக்குற அலுவல் நெருக்கடில ஒன்னும் செய்ய முடில!!நிச்சயமாய் ரசிக்கும் வண்ணம் புகைப்படங்கள் எடுத்து உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்!! பார்த்து சொல்லுங்க..

KARTHIK said...

// கவித்துவமான படங்கள் எடுக்க விரும்பி தான் அதிக விலை குடுத்து டிஜிட்டல் காமரா வாங்கினேன்.//
நல்ல விசையம்

நாளைக்கு நைட்டு 12 மணி வரைக்கும் கலந்துக்கலாம்.
முடிஞ்சா அனுப்புங்க.

M.Rishan Shareef said...

வண்ணதாசனின் எழுத்துக்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும். ஆனந்தவிகடனில் தான் இதுவரையில் இவரது எழுத்துக்களை வாசித்து வந்திருக்கிறேணன். சின்னச் சின்ன விடயங்களையும் அழகிய வர்ணனைகளோடு இவர் எழுதும்விதம் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. பகிர்வுக்கு நன்றி நண்பரே :)

லேகா said...

//நாளைக்கு நைட்டு 12 மணி வரைக்கும் கலந்துக்கலாம்.
முடிஞ்சா அனுப்புங்க//

ம்ம்ம்ம்ம்ம்.......மதுரை புகைபடங்களை அனுபுறேன்!!

லேகா said...

//வண்ணதாசனின் எழுத்துக்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும். //

நன்றி ரிஷான்

NILAMUKILAN said...

எனக்குப் பிடித்த வண்ணதாசனின் சிறுகதைகள் பற்றிய பதிவு அருமை. விகடனில் வெளி வந்த அகமும் புறமும் பற்றிய எழுதவில்லையே..!

லேகா said...

//விகடனில் வெளி வந்த அகமும் புறமும் பற்றிய எழுதவில்லையே..!//

இலக்கியம் பரிட்சயம் இல்லாதவர்களுக்கு வண்ணதாசனை "அகமும் புறமும்" மூலமாகவே தெரியும்!!அதான் அவரின் சிறுகதைகளை குறித்து பதிவு செய்தேன்..
அகமும் புறமும் குறித்து ஒரு வரி இணைத்துவிட்டேன் கேட்டதிற்கு இணங்க.. :-)

Anonymous said...

Vannadasan patri theriyamele avarudan nan palakiya varudangali ippothu en ninaivu asaivil....

eratosthenes said...

vannadasanin sirukathai thoguppu entha pathipagam?

therinthavargal neram kidaithal enakku mail seiyummaru kaetukolkiraen.....
k.is.ashok94@gmail.com

nanri