Friday, August 1, 2008

தகழியின் செம்மீன் காலம் கடந்து நிற்கும் காவியம்

நாவல்களும் நிஜ நிகழ்வுகளும் திரை வடிவம் பெரும்பொழுது உண்மைக்கு முழு வடிவம் தர இயலாது தோற்று போவதை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.தி.ஜா வின் "மோகமுள்" ஞான ராஜசேகரனால் திரை வடிவம் பெற்று வெளிவந்த பொழுது பலத்த எதிர்மறை விமர்சனம் பெற்றது. ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்",சுஜாதாவின் "கரை எல்லாம் செண்பக பூ","பாரதி" என மக்களின் கற்பனையோடு ஒத்து வர காரணத்தினால் தோல்வி அடைந்த படங்களின் பட்டியால் நீளம்.

இதில் இருந்து பெரிதும் விலகி நாவலே திரைப்படமாக திரைப்படமே நாவலாக காணப்படும் படைப்புகளுள் மிக முக்கியமானது "செம்மீன்". சுந்தரராமசாமியின் மொழியாக்கத்தில் வெளிவந்த தகழியின் இந்நாவல் ஏற்படுத்திய பாதிப்பிற்கு சிறிதும் பங்கம் இன்றி வெளிவந்தது இத்திரைகாவியம்.என் மட்டிலும் நல்ல திரைப்படம் ஒரு தேர்ந்த நாவல் படித்த திருப்தியை தரக்கூடியதாய் இருக்க வேண்டும்."Amelie""Cider House Rules""Gadashredha" போன்ற திரைப்படங்கள் அந்த அனுபவத்தை தரவல்லது..இவ்வரிசையில் செம்மீனுக்கு முக்கிய இடம் உண்டு.




தகழி சிவசங்கரன்பிள்ளை மலையாளத்தில் எழுதி பெரும் வெற்றி பெற்ற நாவல் செம்மீன்.கடலோர கிராமத்தின் காதல் கதை.அழகாய் ஆர்பாட்டம் இல்லாமல்,எளிய நடையில் எழுத பட்ட இந்நாவல் தமிழில் மொழிபெயர்கப்பட்டுள்ளது.ஏழை மீனவ குடும்பத்தில் பிறந்த கதை நாயகி விரிந்த ஆசைகள் இன்றி வாழ்க்கையை கொண்டு செல்ல பழகிகொள்கிறாள்.அவ்வூரின் சாயபு வீட்டு இளைஞனுடன் அவளுக்கு உண்டாகும் காதல் ஆனது.இரவு கடற்கரையோரம் கேட்கப்படும் இசையினுடே அழகாய் மலர்கிறது. நாட்கள் செல்ல அவளது ஏழை தந்தை மிக சிறந்த மீனவன் என அறிய படுகின்ற ஒருவனை அவளுக்கு மணம்முடித்து வைக்கின்றான்.வாழ்க்கையின் சூழலுக்கு தன்னை மாற்றி கொள்பவளாய் நாயகி எதிர்ப்பு எது கூறாமல் அழுகையுடன் புது வாழ்வை ஏற்று கொள்கிறாள்.கணவனுடன் புது இடத்திற்கு சென்று தன் வாழ்வை தொடங்குகிறாள்.மகிழ்ச்சியாய் செல்லும் அவள் நாட்கள் நிலையற்ற தன் காதலலின் நிலையை கண்டு தாளாமல் அவளை வெறுமை கொள்ள செய்கிறது..யாரும் அறியாத ஒரு இரவில் நாயகியும்,அவள் காதலனும் கடலில் ஆரம்பித்த தம் காதலை கடலிலே முடித்துகொள்கின்றனர்...



தகழி அவர்கள் இக்கதையை கொண்டு செல்லும் விதம் அருமை.மீனவ குடும்பங்களின் திருமண சடங்குகளை அழகாய் விவரித்து இருப்பார்.நாயகிக்கும்,அவள் தாயருகுமா உறவு எல்லைகள் அற்று விவரிக்க பட்டுள்ளது.அம்மக்களின் ஆசைகள்,பேராசைகள்,பொறாமை,வாழ்கை முறை,உணவு பழக்கம்,நட்பு,வீரம்,ஏமாற்றம் என அனைத்தையும் எளிமையாய் விவரித்துள்ளார் தகழி..இந்நூல் படித்து 7 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்..ஆதலினால் கதை மாந்தர்களின் பெயர் நியாபகம் இல்லை...

2 comments:

Athisha said...

மிக அருமையான பதிவு லேகா
தகழி குறித்து இப்போதுதான் முதல் முறை அறிந்து கொண்டேன்
மிக்க நன்றி

லேகா said...

நன்றி அதிஷா.
மலையாள இலக்கிய உலகில் தவிர்க்க இயலாத எழுத்தாளர் தகழி.
அவரின் தோட்டியின் மகன்,செம்மீன் தமிழில் மொழிபெயர்க்கபட்டு உள்ளது..