Tuesday, January 5, 2010

நர்சிம்மின் "அய்யனார் கம்மா"

சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து மதுரைக்கு வைகையில் சென்று கொண்டிருந்த பொழுது எதிரே உட்காந்திருந்த நபர் நர்சிம்மின் "திகட்ட திகட்ட காதலி" கதையை விகடனில் படித்துகொண்டிருந்தார்..அந்த நொடியில் ஏற்பட்ட மகிழ்ச்சியை குறுஞ்செய்தியில் நர்சிம்மிடம் உடனே பகிர்ந்துகொண்டேன்.பதிவர்கள் எழுத்தாளர்களாய் வளர்ச்சி காண்பது சந்தோஷதிற்குரிய நிகழ்வு.இத்தொகுதியில் உள்ள பெரும்பாலான கதைகள் வலையில் படித்திருப்பினும் நூலாக வாசிக்கும் பொழுது வேறு அனுபவமாக உள்ளது.
ஜனரஞ்சக கதைகளுக்கு திடுக் திருப்பங்களும்..எதிர்பாரா முடிவுகளும் இருக்க வேண்டியது அவசியம்.. வாசகன் வேண்டுவதும் அதுவே.அந்தவகை எழுது நர்சிம்மிற்கு எளிதாய் வருகின்றது.இவரிடம் வியக்கும் ஒன்று,நாம் கண்டு கொள்ள தவறும் அன்றாட நிகழ்வுகளை நுட்பமாய் கவனித்து அதை கோர்வையாய் சொல்வது."செம்பட்டை கிழவி', கிராமத்து இளைஞனுக்கும் அவனின் பாட்டிக்குமான பேரன்பை,விவரணைகளோடு சொல்லும் இக்கதை எனக்கு மிக பிடித்தது.மதுரை பக்கத்துக்கு கிராமத்து பேச்சு வழக்கு இக்கதைக்கு பெரும் பலம்."தந்தையுமானவன்",மருத்துவமனை நாட்கள் நினைவேட்டில் இருந்து எப்போதும் நீக்க படவேண்டியவை..துயரம் நிறைந்த அது போன்றதொரு கணத்தின் அழுத்தமான பதிவிது."வெத்தலை பெட்டி", வாய் விட்டு சிரிக்க வைத்த கதை. அச்சு பிழை போல சில மனிதர்கள் நம்மிடையே இருப்பதுண்டு...இக்கதை நாயகன் போல.

"ஞாபகமாய் ஒரு உதவி" மற்றும் "சந்தர்ப்பவதம்" ஆகியவை தினசரி நெருக்கடியில் உறவுகளும் நண்பர்களும் ஒதுக்கபடுவதை அழகாய் சித்தரிக்கும் கதைகள்.இத்தொகுதியில் "தந்தையுமானவன்" மற்றும் "செம்பட்டை கிழவி" கதைகள் சற்று மாற்றி அமைக்கபட்டிருந்தால் நல்ல இலக்கியமாக வந்திருக்கும்.சிறு சிறு காரியங்கள் குறித்த விவரணைகள் சுவாரஸ்யமாய் இருந்தாலும் சில இடங்களில் அதுவே அலுப்பை தருவதாய் உள்ளது.இது போன்ற சின்ன சின்ன குறைகள் நீக்கி பார்த்தால் நல்லதொரு வாசிப்பனுபவமே.வாழ்த்துக்கள் நர்சிம் இந்த நூலுக்கும் இனி வரப்போகும் நூல்களுக்கும்!!

8 comments:

மோகன் குமார் said...

நானும் கூட வாசித்து விட்டு இது பற்றி எழுதணும் என நினைத்து கொண்டுள்ளேன். விரைவில் எழுதுவேன் என் நம்புகிறேன்

கிருஷ்ண பிரபு said...

ரொம்ப நாள் நர்சிம்மின் கதைகளை மேம்போக்காக பார்த்துவிட்டு சென்று விடுவேன். சில நாட்களுக்கு முன்பு 'புளிக்காரக்கா!' கதையை அவரிடம் கேட்டு வாங்கிப் படித்தேன். அதை வைத்துத் தான் 'அய்யனார் கம்மா' வாங்கினேன். இனிமேல் தான் படிக்க வேண்டும்.

குப்பன்.யாஹூ said...

வஷிஸ்டர் வாயில் இருந்தே ப்ரும்ம ரிஷி பட்டம்,

நர்சிம் வாழ்த்துக்கள்.

பதிவு மிக அருமை லேகா, பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

லேகா உங்கள் பதிவு கூட இந்தியா டுடே தமிழ் இதழில் வரப் போகிறதாமே

லேகா said...

நன்றி மோகன்:-)


நன்றி கிருஷ்ணன் பிரபு

லேகா said...

@ராம்ஜி

வருகைக்கு நன்றி.

//லேகா உங்கள் பதிவு கூட இந்தியா டுடே தமிழ் இதழில் வரப் போகிறதாமே//
நீங்க சொல்லி தான் தெரியும்!!ம்ம்ம்ம்....தவறான செய்தியாக இருக்கும்!!

vellinila said...

Dear friend! pls read this blog and send your feedback - www.vellinila.blogpsot.com-thanking you !

நர்சிம் said...

நன்றி மேடம்

C.Nagarajan said...

I really want to type in Tamil, but don't know how as of now, probably will learn ASAP. Your review is very realistic and as if you are giving a honest feedback to Mr.Narshiman itself. I honestly is unaware about the writings of Mr.Narashiman, am going to start reading his creations very soon.